Sunday, December 8, 2013

மறுமை வாழ்வு, ஒரு தெளிவு!

Post image for மறுமை வாழ்வு, ஒரு தெளிவு!
ஆராய்ச்சி பகுத்தாய்வின் அடிப்படையில் கிடைக்கப்படும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுத்தாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமான ஒன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இறப்பிற்குப்பின்  ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிக்கை கொள்ளும்படி போதித்தார்கள்.
மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொருளற்றதாகி விடும் எனும் அளவுக்கு இறைத்தூதர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வைப்பற்றி அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய  பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறை வெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து இறைத்தூதர்களும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையில் ஏராளமான நல்லறத் தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப் பழக்க வழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாருபட்டதோடல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியாளர்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது.
தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமை படுத்தியது எது? அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாக உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.
இதனால்தான், இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைத்தூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு, மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலை வணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்க ரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது.
மனிதன் தர்க்கவாதியாகி விடுகிறான்:
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”" என்று.
36:79. ”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80. ”பசமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை.
45:24. அவர்கள்; ”நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; ”காலம்”" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை”" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ”நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்”" என்பது தவிர வேறில்லை.
ஒரு நாள் வரும் அன்று உலகம் அனைத்தையும் இறைவன் அழித்துவிடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய நாளின் துவக்கமாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண் பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீமைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படுவர். மனிதனின் ஆத்மீகத் தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன் மறுமை வாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப்பின் வாழ்வு இல்லையென்றால் இறை நம்பிக்கை என்பது அர்த்தமற்றதாகிவிடும். அப்படியே ஒருவன் இறைவனை நம்பினாலும் நியாயமற்ற இறைவனைத்தான் நம்ப வேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல.
நிச்சயமாக இறைவன் நீதமிக்கவன். இவ்வுலகில் வரை முறையின்றி கொடுமை புரிந்தவர்கள், அப்பாவி உயிர்களை பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தமது மனோ இச்சைகேற்ப மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சயமாக தண்டிப்பான். மேலும் நியாயத் தீர்ப்பு நாள் வந்தே தீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.
இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்:
34:3. எனினும் நிராகரிப்பவர்கள்; ”(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது”" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பொியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹ{ல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:4. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.

34:5. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
இறைவனின் கருணையும் நீதியும் முழு அளவில் மறுமை நாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளை சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமை நாளைப் புறக்கணித்து மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். பாவிகளின் நிலைைைய குறித்து குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
மறுமை வாழ்க்கையை மறுப்பவர்கள் இறை நம்பிக்கையாளர்களையும் நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத் தருவாயில் தங்கள் தவறை உணர்ந்து தங்களுக்கு இவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது புலம்புவார்கள்.
மரணத் தருவாயில் கோரிக்கை நிராகரிக்கப்படும்:
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!”" என்று கூறுவான்.
23:100. ”நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக”" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
23:101. எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
23:102. எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
23:103. ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை காிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கையைப் புறக்கணித்தால் அங்கு அனைத்து பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும். இலஞ்ச ஊழல்கள் பெருகும். இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும்.
ஆத், ஸமூத், ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் அழிவு:
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
69:13. எனவே, ஸ_ாில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:15. அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ”இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்”" எனக் கூறுவார்.
69:20. ”நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”"
69:21. ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கயைில் -
69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
69:24. ”சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்”" (என அவர்களுக்குக் கூறப்படும்).
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ”அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ”(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ”என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ”என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”" (என்று அரற்றுவான்).
69:30. ”(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”"
69:31. ”பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:32. ”பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்”" (என்று உத்தரவிடப்படும்).
69:33. ”நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”"
69:34. ”அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை.”"
69:35. ”எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”"
69:36. ”சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”"
69:37. ”குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”"
ஆகவே மறுமை நம்பிக்கை மனிதனுக்கு தீர்ப்பு நாளின் வெற்றியை மட்டும் அருளவில்லை. இவ்வுலகில் மனிதன் தனது பொருப்பை உணர்ந்து தனக்குரிய பணியினை செம்மையாக, முறையாக ஆக்ககரமாகச் செய்து உலக அமைதியும் இன்பமும் நிரம்பியதாக ஆக்கவும் இஸ்லாம் வழி காட்டுகிறது.

Sunday, November 3, 2013

என்னை கவர்ந்த இஸ்லாம்

முஹம்மத் அஸத்
போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார்.
லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.வைதீக யூதக் குடும்பத்தில் உதித்த ஓர் இளைஞர் அம்மதக் கோட்பாடுகளை நல்லபடி கற்றுணர்ந்த ஓர் அறிவாளி ஐரோப்பிய நாகரிகத்தில் ஊறிப் போயிருந்த ஒரு மேலை நாட்டவர் முஸ்லிமானதுடன் மட்டுமின்றி இஸ்லாத்தின் சட்ட நுட்பங்களை எடுத்து விளக்கும் மேதை என்று புகழப்படும் அளவுக்கு மாறியது எப்படி? இதைத் தெரிந்துகொள்வது அதுவும் அவர் வாயிலாகவே தெரிந்து கொள்வது நல்லதல்லவா?
பைபிளின் படைய ஏற்பாட்டிலும் தல்மூதிலும் வருணிக்கப்பட்டிருக்கும் "இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மீது மட்டுமே அக்கறை கொள்பவனாக இருக்கிறான்". அப்படியானால் இதர மக்களைப்பற்றி அந்த ஆண்டவனுக்குக் கவலை இல்லையா? இக்கேள்விக்கு வைஸ்ஸின் உள்ளத்தில் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எல்லோரும் யூதர்களாக முடியாது. பிறப்பினால் தான் யூதனாக முடியும். யூதர்களாக முடியாத ஏனைய மக்களின் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ளும் இறைவன் யார்?
ஒரு யூதப் பெண் அல்லது கிறிஸ்துவப் பெண் ஒரு முஸ்லிமை மணந்து, கணவன் வீட்டில் குடித்தனம் நடத்த வருகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் யாரை ஒரு புனிதமான மனிதராக தேவகுமாரனாக மதிக்கிறாளோ, அதே மனிதரை அந்த முஸ்லிமும், அவர் குடும்பத்தினரும் புனிதமானவராகவும் இறைவனின் தூதராகவும் மதிப்பதைக் காண்கிறாள். முந்தய நபிமார்களை முஸ்லிம்கள் அவதூறாகப் பேசுவதை அவள் காணவே முடியாது. மாறாக, ஒரு முஸ்லிம் பெண், ஒரு யூதனின் அல்லது கிறிஸ்துவனின் மனைவியாக குடித்தனம் நடத்தச் சென்றால், இவள் யாரை இறைவனின் இறுதித் தூதரென்று நம்பி மரியாதை செய்கிறாளோ அந்தத் தலைவரை அவள் கணவனும், அவர் வீட்டாரும் இகழ்வதைத்தான் காண்கிறாள்.
அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இந்த இறுதித் தூதரை இழிவாகப் பேசுவதைத் தன்னுடைய காதுகளாலேயே கேட்கவும் நேரிடுகிறது. ஏனேனில் தந்தையின் மார்க்கத்தைத்தானே பிள்ளைகள் பின்பற்றுவது வழக்கம். இம்மாதிரியான அவச்சொல்லுக்கு ஒரு முஸ்லிம் பெண்ணை இலக்காக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
எகிப்தியரின் பதிலைக் கேட்டுவிட்டு கிரேக்கர் வாயடைத்துப் போனார். பதில் சொல்ல முடியவில்லை. இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயமும் உண்டு. இந்த எகிப்தியர் எழுதப் படிக்கத் தெரியாதவர். தமது சமயோசித அறிவின் மூலமே கிரேக்கரின் கேள்விக்குத் தக்க விடை அளித்திருக்கிறார். எப்படியிருப்பினும், இது நல்ல பொருத்தமான பதில்தான் என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குப் பெருமை தேடித்தரவில்லை. இஸ்லாம் தான் முஸ்லிம்களுக்குப் பெருமை தேடித் தந்தது. நபிகள் நாயகமவர்கள் அறிவுறுத்திய உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றி வந்த வரை முஸ்லிம்கள் வெற்றி முனையின் பக்கமே இருந்தார்கள். இதை விடுத்து அவர்கள் அப்பால் செல்லச் செல்ல பேரும் புகழும் அவர்களை விட்டு நகர்ந்துகொண்டே போயின. இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது தெள்ளென விளங்கும்.
என்றிலிருந்து நம்பிக்கை என்பது வெறும் சடங்காகி விட்டதோ, வாழ்க்கைத்திட்டம் என்பது சொல்லளவோடு நின்று விட்டதோ, உளமார உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்பது அறிவிற்கு வேலை கொடுக்காத ஒன்றாகி விட்டதோ, அன்றிலிருந்து முஸ்லிம்களும் ஒரு மாபெரும் சக்தியாகத் திகழத் தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

Monday, October 21, 2013

தமிழில் வெளியானது "தி மெசேஜ்" திரைப்படம்!

மிழர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறு தொடர்புடைய, கடந்த 1977 ஆம் வருடம் வெளியான, தி மெசேஜ் (The Message) எனும் ஆங்கிலத் திரைப்படம்  தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது.
Star Communications நிறுவனரும், தயாரிப்பாளருமான காயல்பட்டினத்தை சேர்ந்த K.M. முஹம்மது தம்பி அவர்களின் முயற்சியில் மொழி பெயர்ப்பாளர் திரு. ராஜேஷ் மற்றும் மவ்லவி காஞ்சி அப்துர் ரவூப் பாக்கவி அவர்களின் மொழி நேர்த்தியுடன் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது. தனித் திரையிடல் மூலமோ DVD வாங்கியோ பார்க்கலாம்.
இதற்கான DVD வெளியீட்டு விழா, சென்னை Four Frames Preview தியேட்டரில் நடந்தது. விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, முகம்மது தம்பி, எல்.கே.எஸ். இம்தியாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கவிஞர் அப்துல் ரகுமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 தகவல்: அபூ ஸாலிஹா


த மெசேஜ்: த ஹிந்து விமர்சனம்:
இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலைமைக்கு அக்காட் தள்ளப்பட்டார். எல்லா சிரமங்களையும் மீறி எடுக்கப்பட்ட இந்தப் படம் தன் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்துள்ளது என்பதை அதனுடைய ஆங்கில மூலமும் அதன் தமிழாக்கமும் தெளிவாக உணர்த்துகின்றன.

ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகமது தம்பி இப்படத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

“இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை இப்படம் மக்களிடம் எடுத்துச் செல்லும். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதில்லை. ஆகவே தனிநபர்களின் பார்வைக்காக வெளியிட்டு வருகிறோம். தனியார் தொலைக்காட்சிகள் மூலம் மக்களை அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறோம்,” என்றார் அவர்.

ஆங்கில வசனங்களின் உச்சரிப்பை தமிழில் அப்படியே கொண்டு வருவது சாதாரண காரியம் இல்லையென்றாலும், இப்படத்தில் பெரிய உறுத்தல் ஏதும் இல்லை. இயல்பாகவே கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவது போல் உள்ளது.

இஸ்லாத்தைத் தழுவுமாறு அறிவுறுத்தி பைசாந்திய சக்கரவர்த்தி, பாரசீக நாட்டுப் பேரரசர், அலெக்சாண்டிரியாவின் அரசர் ஆகியோருக்கு முகமது நபியின் தூதுவர்கள் செய்தி கொண்டு செல்வதோடு படம் தொடங்குகிறது.

பாலைவன சுடுமணலில் கிளம்பும் கானல் நீரில் இருந்து வெளிப்படும் புரவிகளின் வேகமும், துளியும் அச்சமின்றி வேற்று நாட்டு அரண்மனையில் புகுந்து பேரரசர்களை இஸ்லாத்துக்கு அழைக்கும் தூதுவர்களின் மனநிலையும், இஸ்லாம் என்ற மார்க்கம் அதைத் பின்பற்றுபவர்களுக்கு எத்தகைய வலிமையை அளிக்கிறது என்பதைச் சட்டென அறிவித்துவிடுகின்றன.

அப்படியே இஸ்லாத்தின் தொடக்கக் காலத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட கடவுளர்களை வழிபடும் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கும் மாபெரும் வணிக நகரம் மெக்கா நம் கண் முன்னே விரிகிறது. காபாக்களிலோ மனிதர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் தெய்வங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விருந்தினர்களை உபசரிப்பதற்குப் பேர்போன மெக்காவில் மதுவுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவில்லை. ஆனால் ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் இவையெல்லாம் எட்டாக்கனிகள். அவர்களைக் கரையேற்ற வருகிறார் நபிகள் நாயகம்.

கருப்பரான பிலால் கதாபாத்திரம், உலகெங்கும் ஒடுக்கப்பட்டு, சொல்லாணாக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கருப்பின மக்களின் பிரதிநிதியாக எழுந்து நிற்கிறார். கொதிக்கும் மணலில் கைகால்கள் கட்டப்பட்டு, சாட்டையடிபடும் பிலாலுக்கும், சாணிப்பாலும் சவுக்கடியும் பட்ட கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மசூதியில் மக்களைத் தொழுவதற்கு அழைக்கும் முதல் வாங்கு ஓதுபவராக பிலால் நியமிக்கப்படுகிறார். மெக்காவில் புகுந்து, யுத்தமின்றி அந்நகரைக் கைப்பற்றியதும் கபாவின் உச்சியில் ஏறி பிலால் செய்யும் முழக்கம் இஸ்லாத்தின் வெற்றி முழக்கம்.

இப்படி எத்தனையோ காட்சிகள் நபிகள் நாயகத்தின் போதனையும் அதன் விளைவுகளையும் எடுத்துக் காட்டினாலும், அபிசினியாவில் அகதிகளாய்த் தஞ்சம் புகுந்த முதல் இஸ்லாமியர்களைக் காத்த கருப்பினக் கிறித்தவ மன்னனின் பாத்திரம் நெஞ்சு நிறைய புகுந்துகொள்கிறது.

ஒரு கோட்டைத் தரையில் கிழித்துவிட்டு, “இசுலாத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதைவிடப் பெரியதல்ல” என்கிறான்.

பின்னர் இஸ்லாமியர்களை மெக்காவுக்கு அழைத்துச் சென்று தண்டிக்க நினைக்கும் அமரை நோக்கி, “மலையாகத் தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் இவர்களை ஒப்படைக்க மாட்டேன்,” என்கிறான். அதற்கு முன்னதாக மன்னனுக்கும் இசுலாத்தைத் தழுவியவர்களுக்கும் நடக்கும் வாதம் இரு மதங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் பெரிதல்லவே என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆனால் இன்று அந்த இரு மதங்களை வழி நடத்துபவர்களும் மன்னன் கிழித்த கோட்டை விரிவாக்கிப் பெரும் நெடுஞ்சாலையாக மாற்றிவிட்டனர். சாதாரண கருத்துப் பரிமாற்றத்துக்குக்கூட இடமில்லாத அளவுக்கு அரசியல் அதில் புகுந்துவிட்டது.

இஸ்லாம் சமாதானத்தை மட்டுமே விரும்பும் மார்க்கம். திணிக்கப்பட்டால் தவிர யாரிடம் யுத்தம் செய்ய நபிகள் அனுமதித்ததில்லை. பெண்களையும், குழந்தைகளும் கொல்ல அனுமதித்ததில்லை. மரங்களை வெட்டுவதற்கு என்றுமே எதிர்ப்புத் தெரிவித்தார். வயல்களில் வேலை செய்பவர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இக்கருத்துகள் படம் முழுக்க அழுத்திச் சொல்லப்பட்டி ருக்கின்றன.

நபிகள், அவருடைய மனைவிமார்கள், அவரது மருமகனான அலி முதலான்வர்களின் உருவமோ, உரையாடலோ படத்தில் இல்லை. நபிகளுடன் மற்றவர்கள் உரையாடும் பல காட்சிகள் இருந்தாலும், அவர் பேசுவது போல் எந்தக் காட்சியும் இல்லை. ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அவர் எதிரில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு எழுகிறது.

பல நேரங்களில் உணர்ச்சிகரமான வசனங்கள் பேசப்பட்டபோது, அரங்கத்தின் அல்லாஹ் அக்பர் என்ற முழுக்கம் எழுந்தது. மார்க்கத்தைத் தெளிவாக்கும் அதே நேரத்தில், இஸ்லாமியர்களுக்குத் தங்கள் மதத்தின் மேல் மீண்டும் ஒரு தீவிரப் பிடிப்பை இப்படம் உருவாக்கும். -  நன்றி சத்திய மார்க்கம்.காம்.

Sunday, October 13, 2013

கேள்வி பதில்

கேள்வி : பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? மார்க்க அடிப்படையில் விளக்கம் கூறவும். (ஹாஜா குத்புத்தீன் ஹாட்மெயில் டாட் காம் மூலமாக)
    பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்கும் போது பெண்களின் பிறப்பு உறுப்பை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை.
    '(நபியே!) முஃமினான ஆண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களின் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்...' (அல்குர்ஆன் 24:30)
    'முஃமினான பெண்ணுக்குச் சொல்வீராக! அவர்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களது வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்...' (அல்குர்ஆன் 24:31)
    ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படாவைகளை பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறர் பார்க்கும் அளவுக்கு தனது அங்கங்களை வெளிப்படுத்தவும் கூடாது என்பதை இந்த வசனங்களிலிருந்து விளங்கலாம்.
    திருக்குர்ஆனில் இன்னும் சில வசனங்கள் இதே கருத்தைக் கூறுகின்றன.
    இதிலிருந்து பெண்களுக்கு பிரசவம் பார்க்க ஆண் டாக்டர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்பதை விளங்கலாம். முன்பே திட்டமிட்டு கைனகாலஜி படித்த பெண் டாக்டர்களை பிரசவத்திற்கு ஏற்பாடு செய்வதே நல்லது.
    வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள், ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர். இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புஹாரி 1361)
    இந்த ஹதீஸில் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார் என்பதிலிருந்து பொதுவாக வெட்கத்தலங்களை பிறரிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதை கூறினாலும் பெண்கள் ஆண்களிலிருந்தும் ஆண்கள் பெண்களிலிருந்தும் மறைக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் சாதாரண நிலையில் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைச் சொல்கிறது. ஆனால் பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கு இது பொருந்துமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
    இது பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கும் பொருந்தும் பொதுவான கட்டளையாகும், என்றாலும் சில தவிர்க்க முடியாத நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    பிரசவம் சிரமானதாக இருக்கும் போது அல்லது அறுவை சிகிச்சையாக ஆகும் போது ஆண் டாக்டர்களின் உதவி தேவைப்படும். அப்போது நாம் ஆண் டாக்டர்களை அனுமதிப்பது தான் சிறந்தது. இல்லையேல் தாய் சேயின் உயிருக்கு ஆபத்தாக ஆகிவிடும்.
    அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
    'எந்த ஒரு ஆத்மாவையும் கொல்லாதீர்கள்' (அல்குர்ஆன் 6:151)
    'நாம் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தி மீறி கஷ்டப்படுத்துவதில்லை' (அல்குர்ஆன் 6:152)
    உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மாற்று வழி இல்லாத போது ஆண் டாக்டர்களை பிரசவம் பார்க்க அனுமதிக்கலாம் என்பதற்கு இந்த வசனங்கள் ஆதாரங்களாகும்.
    மேலும், நிர்பந்தத்தின் போது ஹராமாக்கப்பட்ட பொருள் கூட உண்ண அனுமதிக்கும் குர்ஆன் வசனம் கூட இதற்கு ஆதாரமாகும்.
    '(நபியே!) நீர் கூறும்; ''தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை'' - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்' (அல்குர்ஆன் 6:145)
    சுருக்கமாக சொல்வதென்றால், பிரசவத்திற்கு பெண் டாக்டர்களையே ஏற்பாடு செய்ய வேண்டும். நமது முயற்சிக்குரிய நற்கூலியை அல்லாஹ் தர போதுமானவன். முடியாத பட்சத்திலோ அல்லது ஆபத்தான சூழ்நிலையிலோ ஆண் டாக்டர்களை அனுமதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

Saturday, October 12, 2013

நீங்கள் உங்களையே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)

இஸ்லாத்தில் தற்கொலை செய்துக் கொள்வது நிரந்தர நரகத்தைத் தேடித்தரும் பாவம் என்பதை அனைவரும் அறிந்ததே. இன்று விஷம் சாப்பிட்டு நாளை இறந்து போனாலும் அதை தற்கொலையாகவே நாம் கருதுவோம். அதே போல மெதுவாக கொல்லக்கூடிய விஷம் (Slow poision) சாப்பிட்டு வாரம், வருடம், 10 வருடம் அல்லது 30 வருடம் சென்று இறந்து போனாலும் நாம் இதை தற்கொலையாகவே கருதுவோம். சிகரெட் புகைப்பதால் மனிதன் தன் வாழ்நாளை மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொள்கின்றான் என்பது விஞ்ஞானத்தில் நிறூபிக்கப்பட்ட உண்மை.
ஆனால் நின்று கொல்லக் கூடிய சிகரெட், இஸ்லாமிய சமுதாயத்திலும் மற்றவர்களிடமும் புத்துணர்வு ஊட்டும் மருந்தாக கருதப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. எனவே மனித சமுதாயத்தில் குறைந்தது ஒரு நபரையாவது இக்கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
சிலர்களது கருத்து சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இது ஒரு நவீனக் கலாச்சாரம் என நினைக்கிறார்கள். ஒரு சிகரெட் பலர் பகிர்ந்து தங்கள் சகோதரத்துவத்தை(?!) வெளிப்படுத்துகிறார்கள். பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ சிகரெட் தேவைப்படுபவனுக்கு தாராளமாக பாக்கெட்டை நீட்டுகிறார்கள். குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்க புகைப்பழக்கம் ஒரு பக்கபலம் என்று நினைப்பவர்கள் அதிகம். இன்னும் சிலர் காலையில் இது இருந்தால்தான் மற்ற கடமைகள் என்கிறார்கள். இவையெல்லாம் மனதளவில் ஏற்படும் மாயை என்பதில் இவர்களுக்கே சந்தேகமில்லை. இவர்கள் தெரிந்து கொண்டே தங்களை அழிவின் பக்கம் தங்களை நகர்த்துகிறார்கள்.
நான் செயின் ஸ்மோக்கர் என்றும் நாளொன்றுக்கு எனக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்று சிலர் பெருமையாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ நான் நினைத்தால் இப்பழக்கத்தை இன்றே நிறுத்திவிடுவேன், நான் ஒன்றும் இதற்கு அடிமையல்ல ஏதோ ஓய்வு நேரத்தில் மன ஆறுதலுக்கு புகைக்கின்றேன் என்கிறார்கள். உண்மையில் இவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைகளே.
இது போன்ற புகைப்பழக்கத்திற்கு பலர் அடிமையாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்கள் யார் என ஆராய்ந்தால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை என்று கூறலாம். புகைபிடிப்பதால் உற்சாகமாய் சண்டையிடும் காட்சிகள், புகைப்பிடிப்பதைக் கண்டு காதல் வயப்படும் பெண்கள், சோக மற்றும் சந்தோஷ சந்தர்ப்பங்களில் புகைப்பிடித்தல் சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவை சின்னத்திரையும் வெள்ளித்திரையும் தவறாமல் இடைச்செருகல் செய்ததன் விளைவு 15 முதல் 19 வயது வரையுள்ளவர்களின் மனதில் புகைப்பழக்கம் ஒரு சிறந்த பழக்கம் என்ற தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.
இதனால் ஆரம்பத்தில் ஜாலிக்காக ஆரம்பிக்கின்ற ஒருவர் காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இப்பழக்கத்திற்காக ஒரு தொகையை தினமும் செலவழிக்கின்றார். இப்பழக்கம் சற்று அதிகமாகி போதைப் பொருட்களைத் தேட ஆரம்பிக்கின்ற சிலரும் உண்டு. சமீப காலங்களாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிகமாக கைது செய்யப்படுகின்ற இடம் கல்லூரி வாசல்களாகவே இருக்கின்றன. இனியாவது தணிக்கைத்துறை சினிமாவில் இது போன்ற காட்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்யது வருங்கால இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர வழி வகுக்கட்டும்.
இத்தீய புகைபழக்கத்தின் காரணமாக தான்மட்டும் தீமையைத் தேடிக்கொள்ளாமல் 'யான் பெற்ற இன்பம்(?!) பெறட்டும் இவ் வையம்' என்பதற்கினங்க அருகில் இருப்பவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கிறான். இதைத் தடுக்க தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள், பேருந்துகள், வணக்கத்தலங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், புகைத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது. எனினும் இந்த அரசுகள் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்க முன்வராததன் நோக்கம் என்னவென்று பார்த்தால் அரசு கஜானாவை அதிகமாக நிரப்புவதில் புகையிலைச் சுங்கவரி பெரும்பங்களிப்பதே ஆகும்.

விற்பனைக்குத் தடைவிதித்தால் அதன் உற்பத்தியாளர்களும், விற்பனைதாரர்களும் மற்றும் அதையே தொழிலாக மேற்கொண்டு வாழ்வை நடத்திவரும் மக்களும் சாலைமறியல், உன்ணாநோன்பு போன்ற போராட்டங்களில் இறங்குகிறார்கள். வீர வசனங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடும் அரசியல் வாதிகள் உயிர்களை அழிக்கும் இத்தொழிலை முடக்கி ஆக்கப்பூர்வமான பல தொழிற் சாலைகள் திறக்க முன் வருவார்களா?
 
கருத்துக்களும் ஆய்வுகளும்
உலக சுகாதார மையம் (
World Helth Organization) கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.
 
2050-ஆம் ஆண்டு வாக்கில் எய்ட்ஸின் மூலம் எவ்வளவு மக்கள் இறக்க நேரிடுமோ அதேபோன்று இந்த கேன்ஸர் மூலமும் இறக்க நேரிடும் என்கிறார்கள். தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கும் விஷயம் தற்போது மட்டும் உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய நாடுகளானது புகையிலை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகுக்கின்றன.
 
புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.

சீனாவில் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 70 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். சீனாவில் சுமார் 30 வயதுகளில் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகைபிடிப்பதால் ஏற்படும் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவராகவே உள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தில் இருக்கும் 80 சதவித புகைபிடிப்பவர்கள் தங்கள் 20 வயதுக்கு முன்பே இப்பழக்கத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

பெருவாரியான நகரங்களில் புற்றுநோய் மையங்கள் பரவலாகத் தோன்றுவதற்குக் காரணம் கேன்ஸர் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பதேயாகும். யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கேன்சரின் ஒருவகை பாதிப்பைத்தான் கீழ்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.
 
பி.பி.ஸி செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது, இங்கிலாந்தில் புகைப்பிடிக்கும் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்மையிழந்தவர்களின் எண்ணிக்கை 120,000. பெரும்பாலானோர் இதை அறியாமலே செய்கிறார்கள். மேலும் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பிறக்க நேரிடுகின்றன.

புகைப்பழக்கமும் ஆரோக்கியத்தின் பாதிப்பும்
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. இதயம் பாதிப்பு, புற்று நோய், நுரையீரல், முகத்தோல் சுருக்கம், குடலில் ஏற்படும் அல்சர், பற்களில் பாக்டீரியாக்களின் தாக்குதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு, ஆண்மையிழப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணியாக அமைகிறது.

மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை எந்த ஓய்வும் எடுக்காமல் இடைவிடாது வரையறுக்கப்பட்ட விதத்தில் அனிச்சையாக இயங்குகின்ற உறுப்புகள் எனப் பார்த்தால் நுரையீரல் மற்றும் இதயம். புகைப்பழக்கத்தின் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாவதும் இவையேதான்.
 
நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
புகைபிடித்தலினால் முதலில் பாதிப்படையும் பகுதி நுரையீரல் தான். காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் விரிந்தும், வெளியிடுவதால் சுருங்கியும் செயல்படுகிறது. ஆக்ஸிஜனை கிரகித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. புகைபிடிப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மோனாக்ஸைடு துகள்கள் நுரையீரல் பகுதியில் படிந்து கட்டிகளாக மாறுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு காசநோய் (Tuber Classes) ஏற்படுகிறது. காலப்போக்கில் நுரையீரல் ஜவ்வுகளில் சிறிய துளைகளை இக்கட்டிகள் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் சிறிய பைகளில் துளைகள் ஏற்படுத்தும் இந்நோயை (Pulmonary Emphysema) என்று அழைக்கின்றனர். இந்நோயிற்கான அறிகுறிகள் உடல் இளைத்தல், தூக்கமின்மை, காசம், வாழ்வில் தன்னம்பிக்கை இழைத்தல் ஆகியவை என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.

இரத்தப் புற்றுநோய் (
Blood Cancer)
நுரையீரலுக்குள் வரும் காற்றுதான் இதயத்திற்குச் சென்று ரத்தத்தைச் சுத்தம் செய்து ஆரிக்கிள்ஸ், வெண்ட்ரிகிள்ஸ் மூலமாக சுத்த இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. புகைப்பதினால் ஆக்ஸிஜனோடு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுத்தமான ரத்தத்தோடு கலக்க நேரிடுகிறது. இதன் விளைவு இதயத்துடிப்பு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை விட கார்பன் மோனாக்ஸைடின் விஷத்தன்மை அதிகமாகும். புகைபிடிப்பதால் இந்த விஷவாயுவானது நுரையீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. இது ஆக்ஸிஜன் பரவுவதைவிட அதி விரைவாக இரத்த நாளங்கள் மூலமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. ஆக்ஸிஜனின் அடர்த்தியை விட கார்பன் மோனாக்ஸைடின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இரத்தத்திலுள்ள செல்களைச் சுற்றி இது படர்கிறது. இது போன்ற பாதிக்கப்பட்ட செல்கள் பிளவுபட்டு பிளவுபட்டு கட்டிகளாக உருவாகிறது. இக்கட்டிகளை முற்றிலுமாக அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்குவது மிகவும் சிரமமான ஒன்று. நவீன கதிர்வீச்சு முறையில் இதை அழித்தல் என்பது அதிகப்படியான செலவுகளுக்கு வழிவகுக்கும்.

எலும்புருக்கி நோய் - லூக்கேமியா (
Leukemia)
மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் சுமார்
7,000 முதல் 25,000 வரை இரத்த வெள்ளையணுக்கள் அடங்கியுள்ளன. இந்த வெள்ளையணுக்களின் மிக முக்கியமான செயல் நோயை எதிர்ப்பதுதான். மனித உடலில் இதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. இரத்த சுழற்சியின் காரணமாக இவை புதிப்பித்துக் கொண்டே இருக்கும். புகைபிடித்தலின் மூலமாக பாதிக்கப்படுகின்ற இவ்வகைச் செல்கள் எலும்புகளின் ஓரங்களின் தங்கி பிளவுபட்டு கட்டிகளை உருவாக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் 50,000 வரை உள்ளன. இவை எலும்புகளின் வலுத்தன்மையை இழக்கச் செய்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே மரணத்தை முத்தமிட்டு விடுகிறார்கள்.

குடல் நோய்கள் (
Stomach Ulcers)
உள்ளிழுக்கின்ற புகையில் கலந்திருக்கின்ற மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் துகள்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து குடல் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது குடலில் ஜீரணிப்பதற்காக சுரக்கின்ற என்ஸைம்களுடன் இணைந்து அதன் இயற்க்கைத் தன்மையை மாறச் செய்கின்றது. இதனால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி குடலுறிஞ்சிகளை அழிக்கின்றன. இதனால் குடல் பாதிப்படைகிறது. சில சமயம் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல் வளர்ச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் படபடப்புத்தன்மை (
Hyper Tension)
ஆரோக்கியமான ஒவ்வொறு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தின் பருப்பொருளாக ஹீமோகுளோபின், பிளாஸ்மா, குளுக்கோஸ், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் இதர பொருட்கள் இருக்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இவ்வாறு இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கூடுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தமும் படபடப்புத்தன்மையும் ஏற்படுகிறது.

தசைச் சுருக்கம்
இரத்தத்தில் இது போன்று ஆக்ஸிஜன் குறைந்து கார்பனின் அளவு கூடும் போது தோலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் புரோட்டீனின் அளவு குறைகிறது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. விளைவு கண்களைச் சுற்றிலும் உள்ள மெல்லிய தசைகளிலும் மற்றும் கன்னங்கள், உதடுகளின் தோல் சுருங்கி வரிகள் போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்களின் முகம் எப்பொழுதும் வரண்ட நிலையிலேயே காணப்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள் தோற்றத்தை மிகவும் விரைவிலேயே பெற்று விடுகிறார்கள்.
 
பற்கள் பாதிப்பு மற்றும் வாயில் ஏற்படும் அலர்ஜி
புகையை உள்ளிழுத்து வெளியிடுவததால் இவர்களின் உதடுகளின் தோல்களின் மெலேனியம் பாதிப்படைந்து கருக்கின்றன. பற்களின் உள்ளும் புறமும் நிக்கோடின் படிவதால் பற்கள் மஞ்சள் நிறமடைந்து விகாரமாகின்றன. காலப்போக்கில் பற்களின் நிறம் நிரந்தரமாக கருப்பாக மாறுகிறது. மேலும் நிக்கோடின் படிவதால் பற்களில் உள்ள கால்சியம் குறைகிறது, பற்களின் ஈறுகளில் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களின் வலுத்தன்மையை இழக்க வைக்கின்றன.

மேலும் இத் தீய பழக்கம் மண்ணீரல், கல்லீரல், நரம்புத்தளர்ச்சி, கடுங் குளிர்காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியமாக அமைகிறது.

வீண் விரையம்
புகை பிடிக்கின்ற ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள். மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வீண்விரையம் செய்கிறார்கள் என ஒரு நிமிடம் தாங்களே கணக்கிட்டுப்பார்த்தால் அவர்களே வியக்கும் வகையில் வீண்விரையம் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சராசரியாக 30 வருடம் புகைப்பிடிக்கும் மனிதர்கள் தனது வாழ்வில் கீழ்கண்டவாறு சிகரெட்டிற்கு செலவழித்திருக்கிறார்கள்.
 
சராசரியாக புகைத்த
ஆண்டுகள்
சராசரியாக 1 நாளைக்கு
புகைபிடிக்க ஆன செலவு
மொத்தம் கரியாக்கிய
ரூபாயின் மதிப்பு
30 ஆண்டுகள்
10 ரூபாய்
1,09,800.00 ரூபாய்
30 ஆண்டுகள்
25 ரூபாய்
2,74,500.00 ரூபாய்
30 ஆண்டுகள்
50 ரூபாய்
5,49,000.00 ரூபாய்

இதுவல்லாமல் புகைத்ததால் வந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க செலவழிக்கும் ரூபாய்கள் மேற்குறிப்பிட்ட லட்சங்களைத் தாண்டிவிடும்.

எனவே நீங்கள் இதற்காகச் செலவழிக்கும் பணத்தை உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாமே. ர்மம் செய்தால் கூட மறுமையில் ஒன்றுக்கு பல மடங்காகப் பெறலாம் என்பது உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?

சிந்தித்து நல்லறிவு பெரும் மக்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையே போதுமானதாகும். அன்புச் சகோதரர்களே இத்தீய பழக்கத்திலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்
நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

மேலும் கூறுகின்றான்
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் 4:30)

Tuesday, October 8, 2013

ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)


உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).
அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேகரம் ஆகும் பணம் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்!
பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ”யார் இந்த ஸயீத்? என்று கேட்டார்.
எங்கள் அமீர்" என்றனர். (அமீர் என்றால் அந்தப் பகுதியின் கவர்னர் எனலாம்.)
என்ன, உங்கள் அமீர் ஏழையா? என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்த்து!.
ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.
உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.
ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்.
குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்த்து. பை கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்து தீனார்கள் கண்டு உரத்த குரலில், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்றார் ஸயீத்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் மரணம் போன்ற பேரிடரின் நிகழ்வில் முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைத் தான் கூறினார் ஸயீத்)

ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!

01 udhiyahதற்போதைய நாட்டின் சூழ்நிலையில் சகவாழ்வையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு எமது அனைத்து விடயங்களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல அரச சட்ட-விதி முறைகளுக்கமை அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் இம்முறை உழ்ஹிய்யாவின்போது பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதாவாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடுமாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் பௌத்த, இந்து மக்களிடையே மாடு அறுப்பதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றிருப்பதால்முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்காக ஆடுகளை பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது அவசியமாகும்.

விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;
 
ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாத்சிப்படுத்தப்படல் வேண்டும்.

அதனையடுத்து மிருக வைத்தியரின் (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபர சீட்டு (Cattle Voucher),சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.   அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
table

(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 - 2009.11.26) 

குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம்நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

வணக்கஸ்தலங்களில் விலங்குகளை அறுப்பது தொடர்பாக ஏனைய மதத்தவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் பள்ளிவாசல்களில் ஆடு, மாடுகள் குர்பான் செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
 
 உங்களின் பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு. ஒரு மிருகத்தை குர்பானி செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும்.

குர்பானி செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்புகால்இரத்தம், சாணம்தோல்) உரிய முறையில் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.

குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும்  முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்த அறிவித்தல் அனைத்து மஸ்ஜித்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் உங்களது பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறும் மஸ்ஜித் நிருவாகிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.    நன்றி-மீள்பார்வை

நிலக்கரி மின் உற்பத்தியின் புதிய அத்தியாயம்! சம்பூர் நிலக்கரி மின் உடன்படிக்கை கைச்சாத்து!

இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தியின் புதிய அத்தியா யத்தினை ஆரம்பிக்கும் வகையில் சம்பூர் நிலக்கரி மின் நிலையத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள து. இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவினை வலுப்படுத்தும் வகையில் திருகோணமலை சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நிர்மாணபணிகளுக் கான உடன்படிக்கைகள் கைச்சாத்தும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இதில் பங்கேற்றார். செயற் திட்டத்தை அமுல்படுத்தும் உடன்படிக்கை, முதலீட்டு உடன்படிக்கை, காணி குத்தகை உடன்படிக்கை, மின்சக்தியினை கொள்வனவு செய்யும் உடன்படிக்கை, நிலக்கரி கொள்வனவு செய்யும் உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டன.

சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின்வழங்கல் தொகு திக்கு 5 ஆயிரம் மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின் உற்பத்தியினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 512 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு செயற்திட்டத்தினை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அமை ச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பெசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாரச்சி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து மின் உற்பத்தி துறையின் எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வினை வழங்க இந்த செயற்திட்டத்தின் ஊடாக முடியும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

நாட்டின் மின் தேவையினை நிவர்த்தி செய்வதற்காக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகள் நீண்டகாலமாக காணப்பட்டன. நாட்டில் ஒன்று அல்லது 2 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். 1982ம் ஆண்டு முதல் இதற்கான தேவைகள் காணப்பட்ட போதிலும் இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

எரிபொருள் மற்றும் உராய்வு எண்ணெய் பயன்படுத்தி மின் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மின் உற்பத்திக்கு கணிசமான நிதியினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அனல் மின் உற்பத்தி நிலையம், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றன நாட்டின் மின் தேவைக்கு அத்தியவசியமானது. ஜனாதிபதியின் தூர நோக்கு கொண்ட செயற்பாடுகள் காரணமாக 2005ம் ஆண்டு இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இன்று இது வெற்றியளித்துள்ளது என தெரிவிதார்

குா்பான் கொடுப்பதன் சிறப்புக்கள்

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு நபி யவர்களின் எச்சரிக்கை:
யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் ஹஸரத் அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 323

குர்பானி கொடுப்பது இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை
யாரசூலல்லா ‘உழ்கிய்யா’ என்றால் என்ன? என்று நபியவர் களிடம் சஹாபாக்கள் கேட்டார் கள். இது உங்களுடைய தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை என்று சொன்னார்கள். மீண்டும் ஸஹாபாக்கள் யாரசூலல்லாஹ் இதில் எங்களுக்கு என்ன (நன்மை) இருக்கிறது? என்று கேட்டார்கள்.
குர்பானி கொடுக்கப் படும் பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஹஸ்ரத் ஜைதுப்னு அர்க்கம் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3127

குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறை
எவர் தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் தனக்காக வேண்டியே அறுத்துக் கொண்டார் எவர் தொழுக்கைக் குப் பின்பு அறுத்து விட்டாரோ அவருடைய குர்பானி பரிபூரணம் அடைந்துவிட்டது. மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பெற்றுக்கொண்டு விட்டார் என நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- அஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- புகாரி 5546, முஸ்லிம் 5069.

குர்பானியின் இரத்தத்திற்கு அல்லாஹ் இடத்தில் மதிப்பு உண்டு.
குர்பானி கொடுக்கும் நாளில் (ஈதுல் அழ்ஹா பெருநாளில்) மனிதர்கள் செய்யக் கூடிய அமல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் வேறு எதுவுமில்லை. பலியிடப்பட்ட அந்தப் பிராணி மறுமையில் அதனுடைய கொம்புகளோடும், முடிகளோடும், குளம்புகளோடும் வரும்.
மேலும் பலியிடப்பட்ட அந்தப் பிராணியின் இரத்தம் பூமியில் விடுவதற்கு முன்பே அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்று விடுகின்றது. எனவே சந்தோஷமாகக் கொடுங்கள் என்ற என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: இப்னுமாஜா 3126 திர்மிதி- 1493)

பல் முளைத்த ஆட்டை குர்பானி கொடுப்பது
குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள். அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 2 வயதுடைய செம்மறி ஆட்டை அறுங்கள் என்று எமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸரத் ஜாபிர் (ரலி) நூல்:- நஸாயீ 4383, முஸ்லிம் 5082, இப்னு மாஜா 3141

கண், காது சரியாக உள்ள பிராணியை குர்பானி கொடுப்பது அவசியம்.
கண்ணிலும், காதிலும் (எதுவித மான குறையும் இல்லாத) பிராணியை குர்பானி கொடுக்க தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் காதின் முன்பக்கம் கிழிக்கப்பட்டது. காதின் பின் பக்கம் கிழிக்கப்பட்டது. காது பிளக்கப்பட்டது. காதில் துவாரம் இடப்பட்டது ஆகிய பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலி) நூல்:- நஸயீ 4378

பிராணிகளை சித்திரவதை செய்யாத அளவுக்கு அறுப்பது
அல்லாஹ் ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறான். எனவே (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு) நல்ல முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுப்பதாக இருந்தால் நல்ல முறையில் அறுங்கள். (அறுப்பவர்) தன்னுடைய கத்தியை கூர்மையாக ஆக்கிக் கொள்ளட்டும். அறுபட இருக்கும் அந்த பிராணிக்கு நிம்மதி அளிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) நூல் நஸயீ 4417, மிஷ்காத் 357, முஸ்லிம் 5055

பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று சொல்வதும் தம் கையால் அறுப்பதும்
பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு, வெள்ளை செம்மறியாட்டு கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி தக்பீர் சொல்லி தன்னுடைய கையால் அறுத்தார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- திர்மிதி 1494

கொம்பு உடைந்து போன பிராணியை குர்பானி கொடுக்கக் கூடாது
கொம்பு உடைந்து போன பிராணியையும், காது அறுந்து போன பிராணியையும் குல்பானி கொடுக்கக் கூடாது என்று நமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலி) நூல்:- இப்னு மாஜா 3545

குல்பானி கொடுக்கக் கூடாத பிராணிகள்
நான்கு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று சமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
1. குருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியும் குருட்டு பிராணி
2. தெளிவாகத் தெரியும் வியாதியுள்ள பிராணி
3. ஊனம் வெளிப்படையாகத் தெரியும் நொண்டி பிராணி
4. வயது முதிர்ந்த எழும்பு மச்சை பலவீனம் அடைந்த பிராணி.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் பர்ரா இப்னு ஆஜிப் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3144

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுப்பது
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுப்பது எப்படி இருந்தது, என்று அபூ ஐயூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தமக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஓர் ,pகுர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அதா உப்னு யஷார் (ரலி) நூல்: திர்மிதி 1505

பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றி இரண்டு ஆடு கொடுத்த ஸஹாபியர்கள்
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடு கொடுத்தார்கள். நானும் இரண்டு ஆடு கொடுத்து வருகிறேன்.
அறிலிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- 5553

கூட்டுக் குர்பானி
நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் றசூலுல்லாஹி (ஸல்) அவர்களோடு குர்பானி கொடுத்தோம்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஜாபிர் (ரலி) நூல்:- திர்மிதி 1502, அபூதாவுது 2809

குர்பானி பிராணியின் உறுப்புக்களை கூலியாகக் கொடுக்கக் கூடாது
(குர்பானி பிராணியின்) ஒட்டகத்தைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அதை அறுத்ததற்கு கூலியாக அதிலிருந்து எதையும் கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலி) நூல்:- புகாரி 1716

குர்பானியில் விசேடமானது
குர்பானி கொடுப்பதில் செம்மறியாட்டில் 2 வருடம் பூர்தியான (கொழுப்புள்ள) குட்டி மிகவும் (விசேசமானது) நல்லது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அபூஹுரைரா (ரழி) நூல்:- மிஷ்காத்.

குர்பானி இறைச்சியை சேமிக்கலாம்
உங்களில் குர்பானி கொடுப்பவர் 3 நாளைக்குப் பிறகு குர்பானி இறைச்சி வீட்டில் இருக்கும் நிலையில் காலை பொழுதை அடைய வேண்டாம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அடுத்தாண்டு வந்த பொழுது ஸஹாப்பாக்கள் யாரசூலுல்லாஹ் சென்ற ஆண்டு செய்வதைப் போல இந்த ஆண்டும் செய்யட்டுமா? என்று கேட்டார்கள்.கும் அதற்கு நபி (ஸல்) நீங்கள் குர்பானி இறைச்சியை சாப்பிடுங்கள் மற்றவர்களுக் உண்ணக் கொடுங்கள்.
சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தது. அந்த சிரமத்தைப் போக்க நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- ஹஸரத் சல்மா இப்னு அக்வாஉ (ரலி) நூல்:- புகாரி 5569

குர்பானி கொடுப்பவர் 10 நாளைக்கு கடைப்பிடிக்க வேண்டிய காரியம்
குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ்ஜி உடைய 10 நாளைக்கு தன்னுடைய நகங்களை வெட்ட வேண்டாம் என்றும் தன்னுடைய (உடம்பிலுள்ள) முடிகள் எதையும் சிதைக்க வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் ஹஸ்ரத் அன்னை உம்மு சல்மா (ரலி) நூல்:- நஸயீ 4367

Monday, October 7, 2013

உலக சிறுவர் தினத்தில் இலங்கை சிறுவர்களுக்கு அதிர்ச்சி! மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

45உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம் கருத்தறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் 10ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அதன் தலைவர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சித்தியடைய தவறிய மாணவர்கள் சிறுவர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியில் விரட்டப்பட்டமை, சூடு வைக்கப்பட்டமை, திட்டப்பட்டமை, மனம் நோகடிக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. -அத தெரண

பாக்கிஸ்தானின் LeT தீவிரவாதிகளுக்கு இலங்கை பாதுகாப்பான இடமாக மாறிவருகின்றதா ? இந்தியாவிற்கு குலை நடுங்குகின்றது!

பாக்கிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான ஷாபாஸ் செரீப்பின் ஆதரவைப் பெற்ற பாக்கிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்-ஈ-தைபாவின் (LeT) மிகப் பாதுகாப்பான இடமாக இலங்கை மிக வேகமாக மாறிவருகின்றது என்று இந்திய பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

இலங்கையில் குறிப்பாக தூரப் பிரதேசங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் தனது அடித்தளத்தை எப்படி அது அமைத்து வருகின்றது என்ற விபரத்தை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று வல்லுநர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

சுற்றுலா என்ற போர்வையில் இன்ரர் சேவிஸ் இன்ரெலிசன்ஸ் (ISI) என்ற பாக்கிஸ்தானில் உளவுப் பிரிவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் அடிக்கடி இந்த இடங்களுக்கு விஜயம் செய்கின்றார்கள்.. இலங்கையின் பகுதிகளில் LeT ஒர பாதுகாப்பான வலயத்தை உருவாக்குவதற்கு பாக்கிஸ்தானின் இராணுவம் உதவி செய்கின்றது என்பதில் சநதேகமில்லை என்று நிபுணர்களில் ஒருவர் அந்த வாராந்த இதழிடம் கூறியுள்ளார்.

தற்பொழுது அவர்களின் இந்த சிறுமையங்கள் இலங்கையின் ஆள்புலத்துக்குள் தாக்குதல்களை நடாத்துவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், இலங்கையின் ஆள்புலத்தை தமது தளமாகவும் இந்தியா மற்றும் ஐரோப்பாவைத் தாக்குவதற்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் காணப்படும் மேற்கத்திய கலாச்சார உடைகள், பன்றி இறைச்சி கலந்த உணவு மற்றும் மதுபானம் என்பன பழைமைவாத மற்றும் தீவிர முஸ்லிம் பிரிவுகளுக்கு அருவருப்பானவை. எனினும், நிச்சயமாக வஹாபிக்களான ஆண்கள் மற்றும் பெண்கள் அண்மையில் பெருவாரியாக இலங்கைகு விஜயம் செய்துள்ளனர். எழும் சந்தேகம் என்னவென்றால், அவர்கள் விடுமுறைக்காக இங்கு வரவில்லை மாறாக மற்றவர்களைச் சந்தித்து மற்ற நாடுகளைத் தாக்குவதற்கு திட்டம் தீட்டுவதற்காகவே என்பதாகும் என்று அந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.    நன்றி-இலங்கைநெட்

அம்பாறையில் 4.5 ரிச்டா் அளவிலான நில நடுக்கம்

அம்பாறை, பாணமவில் 4.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கடலுக்கடியில் 400 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாகவே புவியியல் வல்லுநர் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை புவியியல் பேராசிரியர் சி.பி.திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல்  600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்