Monday, September 30, 2013

முஸ்லிம்களும் கடன் விவகாரம் பற்றிய திருமறை வசனமும் விசிந்தனம் மலையாள வாரஇதழை தழுவி - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

இறைவனது வழியில் பொருட்களைச் செலவிடுவதை இறைவனுக்குக் கொடுக்கும் கடனாகத் திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.

அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான் (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான் அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:245)

மனிதர்களுக்கு மத்தியில் கடன் கொடுப்பதைக் குறிப்பிடும் வசனமல்ல இது எனினும் கடன் கொடுத்தல் என்ற நற்கருமத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

தேவை என்ற சூழ்நிலையே மனிதனைக் கடன்வாங்கச் செய்கின்றது. பல்வேறு தேவைகளுக்காக நாம் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட போதிலும் அதனை எழுதி வைக்கும் பழக்கம் பலரிடம் இல்லை. அப்படியே எழுதினாலும் சாட்சிகளை வைத்துக்கொள்வதில்லை. அதிக பட்சமாக கடன் வாங்குபவருடைய அல்லது கொடுப்பவருடைய டைரிக் குறிப்புடன் அது நின்று விடுகின்றது. ஆனால் கடன் விவகாரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகும் சமயத்தில் மட்டுமே இறை நம்பிக்கையாளர்களே! என்று அழைத்துக்கொண்டு திருக்குர்ஆன் கடன் சம்மந்தமாக உபதேசித்த வசனத்தைப் பலரும் நினைவு கூருகின்றனர்.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும் மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும் தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும் அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள். இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும். எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282)

எழுத்து விவகாரத்திற்கு சிக்கலான பயணம் போன்ற சந்தர்ப்பங்களில் அடமானம் பெற்றுக் கொள்ளலாம் என்று அடுத்த வசனம் கூறக்கூடிய நிலையில் அவ்வாறு சிக்கல் இல்லாத சந்தர்ப்பங்களில் எழுத வேண்டியது அவசியம் என்பதை விளங்க முடிகின்றது. ஆனாலும் திருக்குர்ஆனில் மிகப் பெரிய வசனம் எது? என்பது போன்ற கேள்விகளுடன் கடன் விவகார வசனத்தின் நடைமுறையை நாம் இஸ்லாமிய வினாடி வினா கேள்விப் பட்டியலில் ஒதுக்குவதுடன் விட்டு விடுகின்றோம்.

முக்கிய தேவைகள் ஏற்பட்டாலும் அல்லாத சூழ்நிலையிலும் சிறிதோ பெரிதோ அளவிலான தொகைகளுக்கான கடன் விவகாரங்களில் நாம் ஈடுபடுவதுண்டு. எனினும் "ஒரு ஆயிரம் ரூபாய் கடனுக்காக இவ்வாறெல்லாம் எழுத வேண்டுமா?", "என் மீது அவ்வளவு நம்பிக்கையில்லையா?", "நான் எழுதும் படி கூறினால் அவர் என்ன நினைப்பார்?" என்பது போன்ற கேள்விகள் கடன் வாங்குபவருடையவும் கொடுப்பவருடையவும் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இஸ்லாமிய வழிமுறையைப் பின்பற்றி கடனை எழுதுவதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

கடன் விவகாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் வசனமோ சிறிய விவகாரங்களைக் கூட எழுதுவதற்குத் தயக்கம் காட்டாதீர்கள் என்று கட்டளையிடுகின்றது. அதன் பிறகும் அலட்சியம் செய்ய முடியாத பெரும் தொகையை எழுதிப் பதிவு செய்வதில் கூட தயக்கம் காடடிவரும் முஸ்லிம் சமூகத்திற்கு அதை எழுதுவதன் அவசியத்தை எடுத்துக் கூறி அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தாருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சில வழிமுறைகளைக் கையாளலாம். அதாவது கடன் விவகாரப் படிவங்கள் தயாராக்கியும் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுக்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டும் கடன் விவகாரத்தைப்பற்றிய வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்லாமிய வழியிமுறையின்பால் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டுவர வழி வகை செய்யலாம்.

இஸ்லாமிய சமூகத்தின் நலப்பணியாளர்களும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் வாழ்வில் பின்பற்றியொழுக வேண்டும் என்ற எண்ணமுடையவர்களும் அத்தகைய விவகாரங்களில் சாட்சியாளர்களாகவும், எழுத்தர்களாகவும் ஈடுபட்டு கடனின் பால் தேவையுடையவர்களுக்கு உதவுவதன் மூலம் அதற்காக அல்லாஹ் வழங்கவிருக்கும் மகத்தான நற்கூலிக்கு தகுதியுடையவராகலாம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடன் மாதிரிப் படிவங்களோ அல்லது இதனை விடச் சிறந்த படிவங்களோ உருவாக்கலாம். கடன் பத்திரத்தில் கடன் குறித்த திருமறை வசனம் மற்றும் நபி மொழி இடம் பெறச் செய்தல் நன்று. முக்கியமாக சாட்சிகளுடைய பெயரும் ஒப்பமும் இடம் பெற வேண்டும்.

கடன் விவகாரத்தில் ஒரு ஆணுக்குப் பகரம் இரண்டு பெண்கள் சாட்சியாக வேண்டும் என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூட அறிந்து கொண்ட விஷயமாகும். ஆண் ஆதிக்கத்தை திருக்குர்ஆன் நியாப்படுத்துவதாக அவர்கள் கூறினாலும், மாதவிடாய், பிரசவம் முதலிய பெண்களுக்கு சிரமமான சமயங்களில் மறதி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதை அறிவியல் மறுக்கவில்லை. கடன் விவகாரம் நடந்த தேதி, கடன் மீட்டுவதற்கான கால அவகாசம் முதலியவை படிவத்தில் இடம் பெற வேண்டும்.

கடன் விவகாரப் பத்திரங்கள் மூலம் இஸ்லாமிய வழிமுறையிலான கடன் எழுதிப் பதிவு செய்யும் நடைமுறையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துவதுடன் முக்கிய தேவைகளுக்கல்லாமல் கடன்வாங்கும் மனப்பான்மையிலிருந்து முஸ்லிம்களைத் தடுப்பதோடு அதன் மூலம் தேவையில்லாமல் கடன் சுமையில் மூழ்குவதிலிருந்தும் சமூகத்தை விடுபடச் செய்யலாம். அவசியத் தேவைகளுக்கன்றி கடன் வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக நபி மொழிகளிலிருந்து விளங்க முடிகின்றது.

கடன் சுமையின் பாரத்தைப் புரிந்து கொள்ள கடன் பட்ட நிலையில் மரணமடைந்த ஒருவரின் கடனுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள ஆளில்லாத நிலையில் அவருடைய ஜனாஸா தொழவைக்க நபி (ஸல்) அவர்கள் தயக்கம் காட்டினார்கள் என்ற என்ற சம்பவமே போதுமானதாகும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெழியாகும்! கல்வி அமைச்சர்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினமாகிய நாளை வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையளர் புஷ்பகுமார முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி்-இலங்கை நெட்.                                            

அர­சுக்­கான மு.கா.வின் ஆதரவை மீள்­ப­ரி­சீ­லிக்க வேண்­டி­வ­ரும்: ஜெமீல்

Jameel20(6)[1]
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு கிழக்கு மாகாண சபை தீர்வு வழங்காமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யுமானால் மாகாண ஆட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வருகின்ற ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் எச்சரித்துள்ளார்.
தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று திங்கட்கிழமை (30) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை வழிமொழிந்து உரையாற்றியபோதே மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
"கிழக்கு மாகாண முதலமைச்சர், மக்கள் நலன் கருதி சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவை எதுவும் அமுல்நடத்தப்படுவதாகத் தெரியவில்லை. இந்த மாகாண சபை நிர்வாகம் செயற்றிறனற்று காணப்படுகிறது.
கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அங்கும் இங்குமாக சுவீகரிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை எமது கிழக்கு மாகாண சபையினால் தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது.
அந்த வகையில்தான் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும் தீர்வின்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனை அப்பகுதி சார்பான எமது கட்சியின் உறுப்பினர் அன்வர் உணர்புவூர்வாமாக இந்த சபையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலைமை தொடருமாயின் கிழக்கின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்திருக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை அக்கட்சியின் குழுத் தலைவர் என்ற ரீதியில் இந்த சபையில் சொல்லிக் கொள்கின்றேன்.
அத்துடன் இந்த மாகாண சபையின் சட்டம், ஒழுங்கை மீறி, இயல்பு நிலைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்- ஆட்சி மாற்றமொன்றுக்கு வழிகோலும் வகையில் நாம் செயற்பட வேண்டியேற்படும் என்றும் எச்சரிக்கிறேன்.
கிழக்கு மாகாண சபையின் இந்த ஆட்சி நிறுவப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் உருப்படியாக எதுவும் செய்யாமல் சோர்வு நிலையில் காணப்படுவதானது உறுப்பினர்களாகிய எம்மையும் மக்களையும் பெரும் கவலையடைய செய்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு இந்த சபை உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது விடயத்தில் முதலமைச்சர் தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாகாண சபைக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம் என்று எச்சரிப்பதுடன் அதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில் முப்பது ஆசனங்களுடன் வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அங்கு அமையப் போகின்ற ஆட்சியை முன்மாதிரியாகக் கொண்டு எமது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு எமது முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் தயாராக வேண்டும்" என்றும் ஜெமீல் குறிப்பிட்டார்.

Sunday, September 29, 2013

கிண்ணியாவின் வளங்கள்.

.!


திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுள் இரண்டாவது பெரிய பிரதேசமாக கிண்ணியா விளங்குகின்றது. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் சில பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் பல பயன்படுத்தாமலேயே இருக்கின்றன.
எனவே, கிண்ணியாவில் காணப்படும் வளங்கள், அவற்றின் பயன்பாட்டுத் தன்மை என்பன குறித்து நாம் இக்கட்டுரை மூலம் விளங்கிக் கொள்வோம்.
மனிதவளம்

கிண்ணியாவில் உள்ள வளங்களுள் மிகவும் முக்கியமானது மனித வளமாகும். இங்கு 17233 குடும்பத்தைச் சேர்ந்த 75699 பேர் வாழ்கின்றனர். இவர்களுள் 18 வயதுக்கு குறைந்தோர் 34795 பேர். 18 வயதுக்கு மேற்பட்டோர் 40904 பேர் ஆவர். ஆண்கள் 37831 பேர். பெண்கள் 37868 பேர் ஆவர்.
இவர்களுள் அரச உத்தியோகம் செய்வோர் ஏறத்தாழ 2000 பேர் மாத்திரமே. இவர்களுள்ளும் அதிகமானோர் ஆசிரியர்களாவர். இதனைத் தவிர பிரிமா, மிட்சுயி ஆகிய தனியார் நிறுவனங்களிலும், அரச சார்பற்ற நிறுவனங்களிலும் ஓரளவு கூடுதல் தொகையினர் தொழில் புரிகின்றனர்.
தொழில் இல்லாதோர் எண்ணிக்கை ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு கூடுதலாகவே உள்ளது. இங்கு தொழில் இன்றி இருப்போரின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரம் ஆகும். இதில் க.பொ.த (உ.த) தகுதியுள்ளோர் சுமார் 12 ஆயிரம் பேர் ஆவர். எனவே, இந்த மனித வளங்கள் எவ்வித பயன்பாடுமின்றி இருப்பது கவலை தரக் கூடிய விடயமாகும்.

கடல்


கிண்ணியாவின் காக்காமுனை முதல் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு வரையான தம்பலகமக்குடா, கொட்டியாரக்குடா ஆகியன கிண்ணியாவுக்கான கடல் வளங்களாகும். இவை சில இடங்களில் பிரதேசத்துக்குள் ஊடறுத்தும் செல்கின்றன.
இதன் மொத்த பரப்பளவு சுமார் 18 சதுர கிலோமீற்றர்களாகும். இவை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. பல்வேறு காரணங்களால் இவற்றில் குறித்த வீதமான பகுதி மட்டுமே பயன் படுத்தப்படுகின்றது.
இந்தக்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஒரு காலத்தில் கிண்ணியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது சில வேளைகளில் கிண்ணியாவுக்கே மீன் தட்டுப்பாடு வந்து விடுகின்றது. இதனை விட இறால், நண்டு வளர்ப்புக்கான சூழ்நிலையும் இங்கு காணப்படுகின்றது.

நீர் நிலைகள்



கிண்ணியாவின் தென்எல்லையாகக் காணப்படும் மகாவலி கங்கை, மற்றும் இடையிடையே காணப்படும் ஓடைகள், பீங்கான் உடைஞ்ச ஆறு, குசுமன்கடவல ஆறு என்பன மற்றும் சில வளங்களாகும். இவற்றின் மொத்த நீளம் ஏறத்தாழ 38 கிலோமீற்றர்களாகும்.
விறால், கனையான் போன்ற பிரசித்தி பெற்ற கருவாடுகள் இந்த நீர்நிலைகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. இந்த நீர் நிலைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்கை மட்டுமன்றி ஏராளமான ஏக்கர் காணிகளில் மிளகாய், கத்தரி, வெங்காயம் போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு அதிகமானவை வெளிமாவட்ட சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன.
இதேபோல மகாவலி கங்கை கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதியில் மீன்களுக்குத் தேவையான பிளாண்டன் எனப்படும் மீன் உணவுகள் இருப்பதால் இப்பகுதியில் நல்ல மீன்கள் பிடிக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றது.

வயல் நிலம்


கிண்ணியாவின் பிரதான தொழில்களுள் விவசாயமும் ஒன்றாகும். இருவகையான வயல் நிலங்கள் கிண்ணியாவில் காணப்படுகின்றன. பெரும்போகம் மட்டும் செய்யக் கூடியவை, பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரண்டும் செய்யக் கூடியவை என்பன அவையாகும். தீனேறி, கண்டல்காடு, குரங்குபாஞ்சான், சாவாறு, பெரியவெளி, சின்னவெளி போன்றன முக்கிய வயல் வெளிகளாகும்.
மொத்தமாக சுமார் 12ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் கிண்ணியாவில் காணப்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் இரு போகம் செய்கை பண்ணக் கூடியவையாகும்.
கிண்ணியாவின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 35 வீதமானோர் விவசாயிகளாவர். இங்குள்ள எல்லாக் காணிகளிலும் விவசாயம் செய்யும் போது அரிசியில் தன்னிறைவு காணப்பட்டதோடு அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பும் கிடைத்தது.

குளங்கள்

இலங்கையில் மூன்று வகையான குளங்கள் காணப்படுகின்றன. அவை பெரிய குளங்கள், நடுத்தரக் குளங்கள், சிறுகுளங்கள் எனப்படும். கிண்ணியாவில் பெரிய குளங்கள் இல்லை. குரங்குபாஞ்சான் மட்டும் நடுத்தரக்குளமாகும். இதனை விட சிறிய குளங்கள் 9 காணப்படுகின்றன.
இந்தக்குளங்கள் விவசாயச் செய்கைக்கு மட்டுமன்றி மீன்பிடிக்கும் பயன் படுகின்றன. சுமார் 1200 ஏக்கர் வயல் நிலங்கள் இந்தக்குளங்கள் மூலமாக செய்கை பண்ணக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.

களிமண்


சூரங்கல், மகருகிராமம், நடுஊற்று, ஆயிலியடி, மணியரசங்குளம், மஜீத்நகர் உப்பாறு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நல்ல களிமண் வளம் காணப்படுகின்றது. இந்த மண் முன்னைய காலங்களில் வீடு கட்டுவதற்கும், செங்கல் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. எனினும், தற்போது களிமண்ணால் வீடு கட்டும் முறை மறைந்து வருவதால் செங்கல் தயாரிப்பதற்கு மட்டும் இம்மண் பயன்படுகின்றது.
கிண்ணியாவில் வருடாந்தம் ஏறத்தாழ 50 கற்சூலைகள் இயங்குகின்றன. ஓவ்வொரு சூலையும் குறைந்தது வருடம் 1 இலட்சம் செங்கற்களைத் தயாரிக்கின்றன. இதன்படி பார்த்தால் கிண்ணியாவில் வருடாந்தம் 50 இலட்சம் செங்கற்கள் தயாரிக்கப் படுகின்றன.
இதனை விட இந்த மண் நல்ல வளமுள்ள மண் என்பதால் விவசாயச் செய்கைக்கும் பெருமளவு பயன்படுகின்றது. கிண்ணியாவில் ஏறத்தாழ 60 சதுர கிலோ மீற்றர் பரப்பில் களிமண் வளம் காணப்படுகின்றது.

சிப்பிகள்


கிண்ணியாவின் நடுத்தீவு பகுதியில் பெருமளவு சிப்பிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இறந்தவை. இன்னும் சில உயிருள்ளவை. எனினும் மொத்தமாக இவை சேகரிக்கப்பட்டு சிப்பி ஆலைகளில் அரைக்கப் படுகின்றன. இவ்வாறு அரைக்கப்பட்ட சிப்பிகள் விலங்குணவுக்குப் பயன் படுத்தப்படும் பொருட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
கிண்ணியாவில் ஏறத்தாழ 40 சிப்பி அரைக்கும் ஆலைகள் இயங்குகின்றன. வாராந்தம் சுமார் 80,000 கிலோ சிப்பித்தூள் இங்கிருந்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

உப்பு


கிண்ணியா – தம்பலகமம் வீதியிலுள்ள கச்சக்கொடித்தீவு என்ற இடத்தில் உப்பளம் இருக்கின்றது. இந்த உப்பளத்தில் சுமார் 400 பேருக்கு உப்பு வயல்கள் இருக்கின்றன. இவற்றுள் சில சிறியவை. இன்னும் சில பெரியவை. சுமார் 8 வருட காலமாகவே இங்கு உப்பு உற்பத்தி முறையாக மேற்கொள்ளப் படுகின்றது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பில் அயடீன் கலக்கப்படாமையால் உணவுத் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் கருவாடு, மரங்களைப் பதப் படுத்தல், மிருகத் தோல்களைப் பதப்படுத்தல் போன்ற தேவைகளுக்காக இந்த உப்பு பயன் படுத்தப் படுகின்றது.
வருடாந்தம் மார்ச் - செப்டம்பர் மாதங்களுக்கிடையில் இங்கு உற்பத்தி இடம்பெறுகின்றது. வருடாந்தம் இங்கு சுமார் 2 இலட்சம் கிலோ கிராம் உப்பு உற்பத்தியாகின்றது. இதற்கு முறையாக அயடீன் கலக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மைகளை அடைய முடியும்.

மணல்


கட்டுமானத் தேவைகளுக்கு மணல் மிகவும் முக்கியமானது. பொதுவாக கிண்ணியாவின் கட்டுமானத் தேவைகளில் பெரும்பாலும் கிண்ணியா மணலைக் கொண்டே நிவர்த்தி செய்யப் படுவதோடு தற்போது வெளியிடங்களுக்கும் இவை எடுத்துச் செல்லப்படுகின்றன. மணல் அகழ்வுக்கு அரசாங்கச் சட்டத்திட்டங்களின் படி முறையான அனுமதி பெறப்பட்டு இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கிண்ணியாவில் பூவரசந்தீவு, சின்னத்தோட்டம், ஈச்சந்தீவு போன்ற இடங்களில் மணல் அகழ்வு இடம்பெற்றது. தற்போது கங்கைப் பகுதியில் இது இடம் பெறுகின்றது. இங்கு மாதாந்தம் சுமார் 2 ஆயிரம் கியூப் மணல் அகழ்வு செய்யப் படுகின்றது.

கிரவல்


கிண்ணியாவில் மகருகிராமம், நடுஊற்று, ஆயிலியடி போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிரவல் காணப்படுகின்றது. எனினும், இவை முதலாந்தரக் கிரவல் அல்ல. இரண்டாம், மூன்றாம் தரக் கிரவலாகவே இவை காணப் படுகின்றன.
இங்கு பெறப்படும் கிரவல் வீதியமைப்பு, காணி நிரப்புதல், வீட்டு அத்திபாரம் நிரப்புதல் போன்ற தேவைகளுக்கு பயன் படுத்தப் படுகின்றது. வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் கியூப் கிரவல் இங்கிருந்து பெறப்படுகின்றது.

கருங்கல்


கிண்ணியாவில் காணப்படும் மற்றுமொரு வளம் கருங்கல்லாகும். பெரும்பாலும், மஜீத்நகர், நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலேயே கருங்கல் காணப்படுகின்றது. வீட்டு அத்திபாரம், தார் வீதியமைப்பு போன்ற தேவைகளுக்கு இந்தக் கல் பயன்படுகின்றது.
இது மிகவும் கஷ்டமான தொழில். கையினாலேயே இந்தக் கல் உடைப்பு பணி இடம்பெறுகின்றது. வருடாந்தம் சுமார் 2 ஆயிரம் கியூப் கல் இங்கிருந்து பெறப்படுகின்றது.

காடுகள்


கிண்ணியாவில் இருவகையான காடுகள் இருக்கின்றன. வனவளத் திணைக்களத்தின் கீழ் வரும் காடுகள், கண்டல் தாவரங்கள் என்பன அவையாகும். சுமார் 2429 ஏக்கர் அடர்ந்த காடும், 1750 ஏக்கர் திறந்த வெளிக்காடும் வனவளத்திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன. இவை சுண்டன்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
கண்டல் தாவரங்கள் சுமார் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் காணப்படுகின்றன. இவை குறிஞ்சாக்கேணி, நடுத்தீவு, காக்காமுனை, முனைச்சேனை, கச்சக்கொடித்தீவு, சூரங்கல், உப்பாறு, சம்மாவச்சதீவு, மாலிந்துறை போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படுகின்றன.

கால்நடைகள்


கிண்ணியாவின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்களிப்பும் மிகப் பிரதானமானதாகும். எருமை உட்பட மாடு, ஆடு, கோழி என்பன பிரதான கால்நடைகளாகும். இவற்றை விட தாரா, புறா, முயல், காடைக்கோழி என்பனவும் சிறிய அளவில் வளர்க்கப்படுகின்றன.
கிண்ணியா அரசாங்க மிருக வைத்திய அதிகாரி அலுவலகக் கணக்கின் படி கிண்ணியாவில் 17 ஆயிரம் மாடுகளும். 2850 ஆடுகளும், 35,800 கோழிகளும் இருக்கின்றன. கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரை கிண்ணியாவில் இல்லாமல் இருப்பது பெருங்குறையாகும். இதனால் மேய்ச்சல் தரைக்காக சுமார் 2ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை ஒதுக்கும் ஏற்பாடுகள் பிரதேச செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டுத்தோட்டம்

காக்காமுனை, சம்மாவச்சதீவு, உப்பாறு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கிண்ணியாவின் வீட்டுத் தோட்டச் செய்கைக்கு பிரபல்யம் பெற்றவையாகும். கத்தரி, மிளகாய், வெண்டி, பயற்றை போன்றன இங்கு செய்கை பண்ணப்படுகின்றன.
கிண்ணியாவின் தேவைக்கு மேலதிகமானவை தம்புள்ள, திருகோணமலை போன்ற சந்தைகளுக்கு அனுப்பப் படுகின்றன. மேற்கூறிய காய்கறிகள் வருடாந்தம் சுமார் 5 ஆயிரம் தொன் அளவில் உற்பத்தியாகின்றன. உப்பாறு பகுதி முழுமையாக பயிர் செய்கைக்கு அனுமதிக்கப் படுமாயின் நாட்டின் வேறு சந்தைகளுக்கும் இங்கிருந்து காய்கறிகளை அனுப்ப கூடியதாக இருக்கும்.


இறால் பண்ணை


கிண்ணியாவின் சுவாத்தியம் இறால் பண்ணைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றது. குறிஞ்சாக்கேணி பகுதியில் இரண்டு இறால் பண்ணைகள் இயங்கின. எனினும் தற்போது இவை இயக்கமில்லாமல் இருக்கின்றன.

தென்னை


இலங்கையின் பணப்பயிர்களுள் ஒன்றான தென்னைகளும் கிண்ணியாவில் இருக்கின்றன. உப்பாறு, பைசல்நகர், அண்ணல்நகர், ஈச்சந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, ஆயிலியடி போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அதிகமாக தென்னைகள் காணப்படுகின்றன. இன்னும் தேவையான தென்னங்கன்றுகளை நடும் வாய்ப்பும் இருக்கின்றது.
கிண்ணியாவின் தேவைக்குப் போதுமான தேங்காய்கள் இங்கு உற்பத்தியாகவில்லை. இதனால் குருநாகல் மாவட்டத்திலிருந்தும் தேங்காய்கள் கிண்ணியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
தென்னந்தும்பினால் குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகள் பெரியாற்றுமுனை, கச்சக்கொடித்தீவு போன்ற பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

கடல்பாசி


கிண்ணியாவில் மே – ஆகஸ்ட் மாதங்களில் கண்டலடியூற்றுக்கு அண்டிய பகுதிகளில் கடல்பாசிகள் வரும். இவை சேகரிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படுகின்றன. உணவுக்காக இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
இது ஒரு குறித்த சீசன் தொழிலாக உள்ளது. கிண்ணியாவில் 5 பாசி வாடிகள் இந்தச் சீசனுக்கு தொழிலில் ஈடுபடுவதை அவதானிக்க முடியும்.

***************************

கிண்ணியாவில் இவ்வளவு வளங்களும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நன்கு பயன்படுத்தப் படுமாயின் பின்வரும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
1. அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்
2. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
3. சகல வழிகளிலும் கிண்ணியா முன்னேற்றம் காணும்.
4. இவையனைத்துக்கும் மேலாக நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு கனிசமான பங்களிப்புகளை செய்ய முடியும்.

இவை கிண்ணியாவின் வளங்கள் சம்பந்தமான சுருக்கக் குறிப்புகளாகும். பல்கலைக்கழக மாணவர்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

தகவல்:
ACM-Mussil
ஏ.ஸீ.எம். முஸ்இல்

அஸ்வரின் கருத்து புனித இஸ்லாத்துக்கு விரோதமானது:மனோ கணேசன்!

download (2)
அஸ்வர் எம்பியின் கருத்து மிகவும் வருந்த தக்கது. ஆனாலும் இதை முஸ்லிம் மக்களின் கருத்தாக நான் பார்க்கவில்லை. இஸ்லாமிய சகோதரர்கள் எனது மக்கள் என்றே நான் நினைந்து வாழ்கின்றேன். அஸ்வர் போன்றவர்கள் என்னை நிறுத்த முடியாது. இத்தகைய கருத்து புனித இஸ்லாத்துக்கு விரோதமானது என்றே நான் கருதுகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி ஒன்றில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்இ தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த போது,அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும்,மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.
குறித்த நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியில் இவ்வாரம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், ஜாதிக ஹெல உறுமயவின் உதவி பொதுசெயலாளரும், மேல்மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பி அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் தொலைபேசியில் கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது. இதன்போது தம்புள்ளை நகரில் இருந்து முஹம்மத் சலீம்டீன் என்ற நபர் அஸ்வர் எம்பியிடம் தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றியும், தற்போதும் அந்த பள்ளிவாசலை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலாக அஸ்வர் எம்பி, இந்த பள்ளிவாசல் பிரச்சினையை தங்கள் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும். இப்போது அங்கு பிரச்சினை இல்லை என்றும், முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகவும், சிலர் வெளியிலிருந்து மதவாதத்தை தூண்டி விடுவதாகவும் சொல்லிக்கொண்டே போனார்.
இந்த சந்தப்பத்தில் அஸ்வரை இடைமறித்த மனோ கணேசன் 'அஸ்வர் கேள்வி கேட்டவர் தம்புள்ளையில் இருந்து கேட்டுள்ளார். அங்கு இன்னமும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு நேரடியாக பதில் கூறுங்கள்' என்று சொன்னார். இதற்கு பதிலாகவே அஸ்வர் எம்பி மனோ கணேசனை நோக்கி,பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும்,மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும்இ தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நான் இன, மத பேதம் பார்ப்பதில்லை. தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக நாட்டின் கவனத்தை ஈர்க்கும் முதல் ஆர்ப்பாட்டம் மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மானினால் கொழும்பில் நடத்தப்பட்ட போது அதில் நான் அக்கறையுடன் கலந்துகொண்டேன். தொடர்ச்சியாக நண்பர் அசாத் சாலியுடன் இணைந்து முஸ்லிம் சகோதர மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக போராடி வருகிறேன்.
சமீபத்தில் வெலிவேரிய ரதுபஸ்கல கிராமத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, உடனடியாக அந்த கிராமத்து மக்களுக்கு தலைமை தாங்கும் பெளத்த தேரரை அழைத்து நண்பர் விக்கரமபாகு கொழும்பில் ஏற்பாடு செய்து நடத்திய ஆர்பாட்டத்தில் நான் அக்கறையுடன் கலந்துகொண்டேன்.
மலையக தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் என்ற மோசடியை எதிர்த்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் என்ற முறையில் கொட்டகலையில் ஆர்ப்பட்டம் செய்தேன். கொட்டகலையில் யாருக்காக ஆர்ப்பாட்டம் செய்தேனோ அந்த மக்களை சார்ந்த ஒரு பிரிவினரே என்னை கல்லால் அடித்து இரத்தம் சிந்த வைத்து காயப்படுத்தினார்கள். மலையக மக்களுக்காக குரல் கொடுக்காதே என்று அவர்கள் கல்லால் அடித்தார்கள்.
இன்று முஸ்லிம் மக்களுக்காக பேசாதே என்று அஸ்வர் சொல்லால் அடிக்கிறார். வடக்கில் வாழும் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். அங்கேயும் எனக்கு ஒருநாள் அடிவிழுமோ தெரியவில்லை. ஆகவே இது எனக்கு புதிய அனுபவம் அல்ல.
என் பணி தொடரும். ஆனால், இத்தகைய சம்பவங்கள் என் உள்ளத்தில் அரசியல் தொடர்பாக ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது..

Saturday, September 28, 2013

சோதனைக்கு மேல் சோதனை! பாகிஸ்தானில் இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம்!


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அரபு நாடும் ஜாஹிலிய்யாக்காலமும்

# அரேபியாவின் புவியியல் அமைவு


அரபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது அரபு மொழியில் "ஜஸீரதுல் அரப்"  - அரேபியத் தீவகற்பம் (Arabian Peninsula) என அழைக்கப்படுகிறது. அப்போதைய அதன் எல்லைகள் பின்வரும் வகையில் அமைந்திருந்தன.
  1. வடக்கு எல்லை   -   ஸிரியாப் பாலைவனமும் இராக்கின் ஒரு பகுதியும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
  2. தெற்கு எல்லை   -   இந்து சமுத்திரமும் அரபுக்கடலும்
  3. கிழக்கு எல்லை   -   பாரசீக வளைகுடா, யூப்ரடீஸ், தைகிரீஸ் நதிகள்
  4. மேற்கு எல்லை   -  செங்கடல், ஸினாய்ப் பாலைவனம்

அரபு நாடு புவியியல், பௌதீக அடிப்படையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததோர் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. ஒரு பக்கம் பெரியதொரு பாலை நிலத்தாலும் ஏனைய மூன்று பக்கங்கள் கடலாலும் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இக்குடா நாட்டுக்கு மிக அண்மையில் பாரசீகம், Rome போன்ற இரு சாம்ராஜ்யங்கள் காணப்பட்டன.ஆயினும் அரேபியாவின் வளம் குன்றிய புவியியல் நிலை காரணமாக அந்நிய அரசுகள் அதன்மீது ஆதிக்கம் செலுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அரேபியா பிரதான மூன்று கண்டங்களை இணைக்குமொரு மையமாகவும் விளங்குகிறது. அதன் வட மேற்குத் திசையால் ஆபிரிக்காக் கண்டத்தினுள் பிரவேசிக்கக்கூடியதாகவும், வட கிழக்குத் திசையால் ஐரோப்பாக் கண்டத்தினுள் பிரவேசிக்கக் கூடியதாகவும் இருக்க கிழக்குத் திசை ஆசியப் பிரதேசங்களைத் தொடர்பு படுத்துகின்றது. மட்டுமன்றி முப்பெரும் கண்டங்களோடு கடல் மார்க்கமாகவும் அது இணைக்கப்படுகின்றது. இதனால் அரேபியாவின் வடக்கு எல்லையைத் தவிர்ந்த ஏனைய கரையோரப்பகுதிகள் அனைத்தும் மக்கள் தொடர்புக்கு வசதியாகக் காணப்பட்டன.

புவியியலும் வரலாறும் ஒன்றுடனொன்று தொடர்புடையது என்ற வகையில் உலகளாவிய ரீதியில் 'ரிஸாலத்' எனும் இறைத் தூது அருளப்படுவதற்குரிய இடமாக அரபு நாடு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதன் இவ்வாறான புவியியல் அமைவும் முக்கியமான ஒரு காரணியாக அமைந்தது. அரேபியாவின் மிகப் பெரும் பகுதி பாலை நிலமாகும். இதனாலேயே அரேபியரின் பொருளாதாரத்திலும் பாலைவனத்தின் செல்வாக்கு மேலோங்கி நிற்கின்றது.

மாகாணங்கள்
அக்கால அரேபியா ஐந்து பெரும் மாகாணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.

1. ஹிஜாஸ் மாகாணம்
பழம் பெரும் பெருமைவாய்ந்த இப்பிரதேசம் சீதோஷ்ண நிலை, நிலத்தினியல்பு, மக்களியல்பு என்பவற்றைப் பொறுத்துப் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அரபு நாட்டின் மலைப்பாங்கான இப்பிரதேசம் அரேபியருக்கு மட்டுமன்றி அனைத்துலக முஸ்லிம்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாம் உதயமான இப்பிரதேசத்தில்தான் புகழ் மிக்க மக்கா, மதீனா, தாயிஃப்  முதலாம் நகர்கள் அமைந்துள்ளன. இங்கு பெரு நதிகள் இல்லையாயினும் ஆங்காங்கே இயற்கையான நீரூற்றுக்கள் தோன்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. இம்மாகாணத்திற்கு மேற்கே செங்கடலும் வடக்கே ஸிரியாப் பாலைவனமும் தெற்கே அஸீர் என்ற பகுதியும் அமைந்துள்ளன.

2. நஜ்த் மாகாணம்
அரேபியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி நில, நீர் வளங்களைக் கொண்ட செழிப்பு மிக்க ஒரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 40000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இப்பகுதியின் மூன்று எல்லைகளில் மணல் வெளிகளே அமைந்துள்ளன. இதன் வட புலத்தில் ஸிரியாப் பாலைவனமும் வடகிழக்கில் இராக் பாலைவனமும் காணப்படுகின்றன.கிழக்கே ஹிஜாஸின் மலைத் தொடரிலிருந்து பாரசீகக் குடாவிலுள்ள பஹ்ரைன், அல்-அஹ்ஸ் பாஸ்லைவனம் வரை நீண்டிருக்கும் இம்மாகாணம் பாலைவனங்களும் மலைக்கணவாய்களும் நிறைந்த பீடபூமியாகும். இடையிடையே பரவலாகக் காணப்படும் பாலைவனச் சோலைகள் பாதுகாப்பிடங்களைப் போன்று அமைந்துள்ளன. இங்குதான் யமாமா, ரியாழ் -Riyadh போன்ற நகரங்கள் கணப்படுகின்றன. சமகால ஸஊதி-அரேபியாவின் தலை நகராக இந்த ரியாழ் நகரமே இருந்து வருகின்றது.

3. உம்மான் மாகாணம்
இது இந்து சமுத்திரத்தின் கிளையான உம்மான் குடாக் கரையில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்கே உம்மான் குடாவும் வடக்கே பஹ்ரைனும் மேற்கே தஹ்னாப் பாலைவனமும் தெற்கே ஹழ்ரமௌத் மாகாணமும் எல்லைகளாய் அமைந்துள்ளன. மஸ்கட் என்பது இம்மாகாணத்தின் தலை நகராகும். இப்பகுதியின் கடற்கரைப் பிரதேசம் செழிப்பான நிலவளம் பொருந்தியது. தற்காலத்தில் தனி ஒரு நாடாக விளங்கும் இப்பிரதேசத்தில் மலைகளும் குன்றுகளும் நிறைந்து காணப்படுகின்றன. மலைகளில் இரும்பு, செம்பு, ஈயம், கந்தகம் முதலாம் தாதுப்பொருட்களும் சந்தனம், அகில் போன்ற வாசனைத் திரவியங்களும் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

4. ஹழ்ரமௌத் மாகாணம்
இது யெமன் மாகாணத்தின் கிழக்கேயுள்ள பகுதியாகும். முன்பு இப்பிரதேசம் யெமனின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. இம்மாகாணத்திற்குத் தெற்கிலும் கிழக்கிலும் இந்து சமுத்திரமும் மேற்கில் யெமனும் வடக்கில் உம்மானும் எல்லைகளாக அமைந்துள்ளன. தேன் அதிகம் விளையும் இம்மாகாணத்தின் பெரும்பகுதி மலைப்பாங்கான பகுதியாகவும் சிறுபகுதி மணற் பாங்கானதாகவும் காணப்படுகின்றன.

5. யெமன் மாகாணம்
அரேபியத் தீபகற்பத்தின் தென்-மேற்குப் பகுதியில் இம்மாகாணம் அமைந்துள்ளது. சில சமயங்களில் இதனயும் ஹிஜாஸையும் சேர்த்து திஹாமா என்று அழைப்பர். செல்வச் செழிப்புக்கும் வியாபாரச் சிறப்புக்கும் பேர் பெற்ற இப்பிரதேசத்தின் தெற்கே இந்து சமுத்திரமும் மேற்கே செங்கடலும் வடக்கே ஹிஜாஸ், நஜ்த் மாகாணங்களும் கிழக்கே ஹழ்ரமௌத் மாகாணமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு விளையும் தங்கம், செம்பு, சாம்பிரானி முதலாம் செல்வப் பொருட்கள் வெளி நாட்டவரைக் கவர்ந்தன. இதனால் முற்காலத்தில் வெளி-நாடுகளிலிருந்து  பெருந்தொகையான வர்த்தகர்கள் அரேபியாவுக்கு வருகை தந்தனர். இன்றும் இப்பகுதி அரேபியாவின் மத்திய செல்வ நிலையமாகக் கருதப்படுகிறது. சிற்றாறுகளும் ஓடைகளும் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. ஏடன் முதலாம் நகர்களைக் கொண்டுள்ள இம்மாகாணத்தின் தலை-நகராக அன்று முதல் இன்று வரை ஸன்-ஆ விளங்கி வருகின்றது.

அரபுத் தீபகற்பத்தை புவியியல் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. வட அரேபியா
2. தென் அரேபியா

அரேபியாவின் பூகோள அமைப்பில் ஹிஜாஸ் அதன் வட பகுதியில் இருக்கும் ஒரு மாகாணமாகும். இம்மாகாணத்தில் திஹாமா என்பது ஒரு மாவட்டமாகும். மக்கா, மதீனா ஆகிய பிரதான நகரங்கள் இங்குதான் அமைந்துள்ளன. பூமியில் முதன் முதலில் தோன்றியது கஃபாவும் அது அமைந்திருக்கும் மக்கா நகருமாகும். இதனாலேயே அந்நகருக்கு உம்முல் குரா  (நகரங்களின் தாய்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்லாத்துக்கு முன்பிருந்தே பிரசித்தி பெற்ற கீழைத்தேய உரோம சாம்ராஜ்யத்துக்கும் தென்-கிழக்காசிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற வணிகப்பாதையின் முக்கிய தங்குமிடங்களில் ஒன்றாக இருந்து வந்தது.

# ஜஹிலிய்யாக் காலம் (Age of ignorance / darkness)
ஜாஹிலிய்யா எனும் பதம் ஜஹ்ல் எனும் வேர்ச் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இப்பதம் அறியாமை, அடக்கமின்மை, மடமை, சத்தியத்தை அலட்சியம் செய்தல், வம்புத்தனம் புரிதல், அடாவடித்தனம் செய்தல், காட்டுமிராண்டித்தனம், அநாகரிகத் தனம் முதலாம் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட, விரிந்த கருத்தை வேண்டி நிற்கும் சொற்செறிவு மிக்க ஒரு சொல்லாகும். கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்திற்கும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் வாழ்ந்த மக்கள் இத்தனை பண்புகளுக்கும் இலக்கணமாக வாழ்ந்ததால் இக்காலப்பிரிவு இருண்ட யுகம் எனவும் அறியாமைக் காலம் எனவும் அரபியில் ஜாஹிலிய்யாக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்குப் பின்னர் அரேபியரிடையே இறைத்தூதர்களின் வழிகாட்டல்கள் இல்லாமையால் அந்த மக்களின் வாழ்வியல் அம்சங்கள் ஜஹ்ல் நிறைந்ததாக அமைந்திருந்தன. இதனால்தான் இக்காலத்தை  ஜாஹிலிய்யாக் காலம் என வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முற்பட்ட ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு காலம் ஜாஹிலிய்யாக் காலமாகும். "நபியவர்கள் பிறந்தபோதும் அதற்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரும் நிலவிய காலப் பகுதியை இது குறிக்கிறது" என வரலாற்றாசிரியர் Hitti தனது History of the Arabs எனும் நூலில் ஜாஹிலிய்யாக் காலத்தை வரையறை செய்கிறார்.

இக்காலப் பிரிவில் தொழினுட்பம், கட்டடக் கலை என்பன ஓரளவு விருத்தியுற்றிருந்தன. மொழிப்புலமையும் கவிதைத் தேர்ச்சியும் வியந்து பாராட்டத்தக்களவு வளர்ச்சி கண்டிருந்தன. ஆகவே "ஜாஹிலிய்யாக் காலம்" என்பதை அறியாமைக் காலம் அல்லது இருண்ட காலம் எனும் பொருள்களில் மட்டும் பயன்படுத்துவது பிழையானதாகவே அமையும். மாற்றமாக மேற்குறித்த அதன் பரந்த பொருளில் அது பயன்படுத்தப்படுவதே பொருத்தமானதாகும்.

ஜாஹிலிய்யாக் காலத்தில் உயர் பண்பாடுகளோ சீரிய சிந்தனைகளோ விழுமிய வாழ்க்கைப் போக்குகளோ இல்லாது அநாகரிகப் பழக்க வழக்கங்களில் மக்கள் மூழ்கியிருந்தமையால், " மனிதர்களின் கரங்கள் தேடிக்கொண்ட தீய செயல்கள் காரணமாக தரையிலும் கடலிலும் குழப்பங்கள் தோன்றலாயிற்று." (30 : 01) என அல்-குர்ஆன் குறிப்பிடுவது இக்காலப் பகுதிக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

# ஜாஹிலிய்யாக் காலத்து சமூக நிலை
சுமார் 150 000 மக்கள் தொகையைக் கொண்டிருந்த ஜாஹிலிய்யாக் கால சமூகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. பதவிகள் எனப்பட்ட நாடோடிகள்
2. ஹழரிகள் எனப்பட்ட நகர்ப்புறவாசிகள்

நாடோடிகள் (பதவிகள்)
பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் பின்தங்கியிருந்த இவர்களே அரேபியாவில் அதிக தொகையினராக இருந்தனர். இவர்களுக்கு வசிப்பதற்கென நிரந்தரமான ஓரிடம் இருக்கவில்லை.  அடிக்கடி இடம் விட்டு இடம் மாறிய இவர்களின் பிரதான தொழில் மந்தை வளர்ப்பாகும்.  நீரூற்றுக்காகவும் பசுமையான புற்றரைக்காகவும் இடம் பெயர்ந்தனர். திடகாத்திரமான தேகத்தையுடைய  இவர்கள் சில வேளைகளில் வழிப்பறியிலும் ஈடுபட்டனர். கல்வியறிவில்லாத இவர்களுக்கு நாகரிகம் பற்றிய சிந்தனையென்பது  கிஞ்சிற்றும் இருக்கவில்லை.

பதவிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழுக்களை "கபீலா" என்றும் அவற்றின் தலைவர்களை "ஷெய்க்" என்றும் அழைத்தனர். வயது முதிர்ந்தோராகவும் சமூக அந்தஸ்துப் பெற்றோராகவும் தரும சிந்தை, வீரம் போன்ற சிறந்த ஆளுமையுடையோராகவும் இருந்தவர்களில் இருந்தே ஷெய்குகள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் தத்தம் குழுவின் கௌரவத்தைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியது. இதனால், அவர்களிடையே அடிக்கடி சண்டைகளும் போர்களும் ஏற்பட்டன. ஒரு குழு பிறிதொரு குழுவின் உடைமைகளைக் கொள்ளையடிப்பதும் அவர்களோடு சண்டையிடுவதும்  வழக்கமான நடவடிக்கைகளாக அமைந்திருந்தன.

நகர்ப்புற வாசிகள் (ஹழரிகள்)
ஹழரிகள் நீர், நில வளமுள்ள பிரதேசங்களில் வசித்து வந்தோராவர். இவர்கள் நிலையான வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் 'பதவி'களை விட பொருளாதாரத்திலும் கல்வித் துறையிலும் நாகரிகத்திலும் முன்னேற்ற்மடைந்து காணப்பட்டனர். ஆயினும் நகர்ப்புற வாசிகளிடமும் ஜாஹிலிய்யாப் பண்புகள் காணப்பட்டன. நகர்ப்புற வாசிகள் 'யெமன்', 'ஹழ்ரமவ்த்' பகுதிகளிலேயே அதிகமாக வசித்து வந்தனர். ஹிஜாஸில் பெரும் பகுதி நாடோடிகள் வதியுமிடமாக இருந்தது. இருப்பினும் ஹிஜாஸிலும் ஆங்காங்கே நகர்ப்புற வாசிகள் வசித்து வந்தனர். மக்கா ஹழரிகளைக் கொண்ட நகரமாக விளங்கிற்று.

அரேபிய சமூகத்தை பொருளாதார அடிப்படையில் 4 வகைப்படுத்தலாம்.
1. பிரபுத்துவ நிலையில் இருந்தோர்
2. மத்திய தர வகுப்பினர்
3. கூலி வேலையாட்கள்
4. அடிமைகள்

பிரபுத்துவ நிலையில் காணப்பட்டோர் நிலச் சுவாந்தர்கள் ஆவர். இவர்கள், 'ஹழரி'கள். தமது பணிகளை அடிமைகளையும் கூலியாட்களையும் கொண்டு நிறைவேற்றினர்.

பொருளாதாரத்தில் நடு நிலையில் காணப்பட்டோர் மத்திய தர வகுப்பினராவர்.

கூலியாட்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள். கூலி வேலை செய்தே தமது அன்றாட ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்வர்.

அடிமைகள் தமக்கென எதுவித சொத்துக்களும் இல்லாதவர்கள். இவர்களது உழைப்பு முழுதும் எசமானருக்கே உரியது.

இவ்வாறான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் தோன்றிய இஸ்லாம், இத்தகைய பாரிய வேற்றுமைகளைக் களைந்து பொருளாதாரத்தில் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்துவதற்காக பெரும்பாடுபட்டது.

சமூக அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அரேபிய சமூகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. சுதந்திரமானவர்
2. அடிமைகள்
3. அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டோர்

சுதந்திரமானோர் சமூகத்தில் உயர் தர வர்க்கத்தினராவர். இவர்களிலிருந்தே 'ஷெய்கு'கள் தெரிவுசெய்யப்படுவர். யுத்தங்களின் போது கைது செய்தல், சந்தையில் கொள்வனவு செய்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒருவர் அடிமையாக்கப்படுவார். இவர்களுக்கு சமூகத்தில் எவ்வித மதிப்பும் இருக்கவில்லை. இவர்கள் எசமானனின் உடமைகள் ஆவர். விரும்பிய போது இவர்களை விற்கவும் வாங்கவும் எசமானுக்கு உரிமை இருந்தது.

இவ்வாறு அரேபியாவில் காணப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவம் நிலவும் ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்த நபியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அளப்பரியன.

# ஜாஹிலிய்யா சமூகத்தில் கலாசார நிலையும் இலக்கியத்தின் செல்வாக்கும்
அக்கால அரேபியரின் வாழ்வியல் அம்சங்களில் கலாசார நிலை ஓரளவு மேம்பட்டுக் காணப்பட்டது. அறியாமையில் இம்மக்கள் மூழ்கியிருந்தாலும் அவர்களுள் எழுத வாசிக்கத் தெரிந்த சிலரும் இருந்து வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவுடையோரை மதிக்கும் பண்பைப் பெற்றிருந்த இம்மக்களது கலாசார வாழ்வில் கவிதை இலக்கியம் முக்கிய இடம் வகித்தது. கவிஞர்களுக்கு பெரு மதிப்பளித்த அந்த சமூகத்தினர் கவிஞர்களை கபீலாக்களின் அருஞ்சொத்தாக மதித்தனர்.கவிஞனில் ஆவி குடிகொண்டிருப்பதாக நம்பினர். அதனால் அவர்கள் கவிஞனுக்கு மதிப்பளித்த அதேவேளை அவனுக்கு அதிகம் பயப்படுபவர்களாகவும் இருந்தனர். அவனுக்கு ஷைத்தானோடு இருந்த தொடர்பு பிறரில் இருந்து அவனை மேம்படுத்தியது மட்டுமல்லாது அவன் அதன் மூலம் அதிசயமான ஆற்றலையும் பெற்றுக் கொண்டான். ஜிங்களும் ஷைத்தாங்களும் இந்தவகையில் மனித ஆற்றலை மிகைத்தவர்கள் என்பது அன்றைய அரபு மக்களின் நம்பிக்கையாகும். இதனால்தான் ஔவோர் அரபுக் கோத்திரத்தாரும் தமக்கிடையே ஒரு கவிஞன் தோன்றிவிட்டால் அக்கவிஞனுக்காக விழா எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையை பேராசிரியர் நிகல்ஸன் தனது "அரேபியர் இலக்கிய வரலாறு" எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அரபுக் கோத்திரமொன்றில் கவிஞனொருவன் இருக்கிறான் என்பது தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் ஒன்றுகூடி அவனது வீட்டுக்குச் சென்றுமகிழ்ச்சி ஆரவாரம் செய்வதுடன் அவனது நல்லதிஷ்டத்திற்காக அக்குடும்பத்தையே வாழ்த்திவிட்டு வருவார்கள்."

அவர்களுள் அதிகமானவர்கள் நினைத்தவுடன் கவி பாடும் வல்லமை படைத்த வரகவிகளாக இருந்தனர். அரேபியாவில் பாலை நிலம் வரண்டாலும் கஞர்களின் உள்ளங்கள் வரண்டு போயிருக்கவில்லை. ஆற்றொழுக்குப் போன்று கவிதைகள் அவர்களது உள்ளங்களில் இருந்து பிரவாகித்துப் பாய்ந்தன. ஒட்டகையின் காலடி சந்தத்துக்கு இசைவாக அவர்கள் கவிதை பாடினர். இவ்வகையில் பிறந்தவை " ரஜ்ஸ்" இனக் கவிதைகள் எனப்பட்டன.

இஸ்லாத்திற்கு முந்திய காலக் கவிதைகளை முற்றுப்பெறாதது, முற்றுப்பெற்றது என இரு வகைப்படுத்தலாம். முதல் வகைக் கவிதையை ஸஜா, ரஜ்ஸ் என இரு வகையாகப் பிரிப்பர். ஸஜா என்பது எவ்வித செய்யுள் அமிப்பும் பெறாத, ஆனால், எதுகை மோனை வரப்பெற்ற - வசனச் சிதறல்களாகும். இவை செய்யுள் அமைப்புப் பெறாத போதும், இசையோடு பாடக்கூடியனவாய் அமைந்திருக்கும். றஜ்ஸ் என்பது செய்யுள் அமிப்போடு கூடிய 'ஸஜா' கவிதைகளின் திருத்திய வடிவமாகும். பல வகையான கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுதிகளை 'முற்றுப்பெற்ற' கவிதை என்பர். அக்காலத்தில் எழுந்த முஅல்லகாத், முபஸ்ஸலியாத் ஹம்ஸா போன்ற போன்ற கவிதைத் தொகுதிகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

ஆண்டுதோறும் உகாஸ், துஹ்ல் மஜாஸ் என்ற பெயர்களில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் அரபுக் கவிதைப் போட்டிகள் நடைபெறத் தவறுவதில்லை. நாட்டிலுள்ள புகழ்பெற்ற கவிஞர்களெல்லாம் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தங்கத்தில் செதுக்கி, கஃபாவின் சுவர்களிலே தொங்கவிடுவார்கள். இத்தகைய கவிதைத் தொகுதிகளை அவர்கள் 'முஅல்லகாத்' என்று பெயரிட்டு அழைத்தனர். இவ்வாறான ஏழு 'முஅல்லகாத்'கள் கஃபாவின் சுவர்களில் காணப்பட்டன. இம்ரஉல் கைஸ், ஜஸ்ஸாஸ், முகல்ஹில், அந்தராஹ் ஆகிய கவிஞர்கள் அக்கால அரேபியர்களிடையே மிகுந்த் புகழ் பெற்றிருந்தார்கள். இவர்களுள் இம்ரஉல் கைஸ் அக்கால அரபுக் கவிஞர்களின் மன்னனாகக் கருதப்பட்டார். இவருடைய கவிதைகள் இஸ்லாத்திற்கு முந்திய அரபுக் கவிதையின் வளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் அளவிட உதவும் கருவியாக விளங்குகின்றன.

இக்காலத்தில் கவிஞர்கள் மட்டுமன்றி அக்தம், ஹாஜிப், ஹிந்தா போன்ற பல அறிஞர்களும் அந்த அரேபியரிடையே வாழ்ந்தார்கள். அரேபியர்களுள் பலர் பேச்சுவன்மை மிக்கவர்களாயும் இருந்தார்கள். இவற்றையெல்லாம் ஆராயும் போது இஸ்லாத்திற்கு முந்திய கால அரேபியர்கள் முற்றாகக் கல்வி அற்ற்வர்களாக இருக்கவில்லை என்று துணிந்து கூறலாம்.

அரேபியரின் உள்ளத்தைப் பொறுத்தவரை கவிதைச் சொல்லம்பானது வில்லம்பை விடப் பலம் வாய்ந்ததாக அமைந்தது. அடிக்கடி தோன்றும் கோத்திரச் சண்டைகளில் கவிஞனின் பங்கு எத்தகையதெனில், போராட்ட ஆயுதங்களை விடத் தாக்கம் மிக்கவனாக அவன் நோக்கப்பட்டான். இதனாலேயே நபியவர்கள் "குறைஷியருக்கு நீங்கள் கவிதையில் பதிலடி கொடுங்கள் ஏனெனில், அது அவர்களுக்கு ஈட்டி முனையை விடக் கூரியதாகும்" (ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறினார்கள்.

ஜாஹிலிய்யாக் காலத்தில் உரை நடை இலக்கியம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. கவிதை இலக்கியமே வளர்ந்திருந்தது. கவிதையின் கருப்பொருளாக பெரும்பாலும் காதல், போர், வேட்டை, மது, மாது போன்றவையே விளங்கின. ஜாஹிலிய்யாப் பருவம், அரபு இலக்கிய வரலாற்றில் கவிதை இலக்கியத்தின் பொற்காலம் என்று புகழப்படும் அளவுக்கு அக்காலம் கவிதை இலக்கியத்தில் முன்னேற்றமடைந்திருந்தது. இதனாலேயே "அஷ்ஷிஃரு தீவானுல் அரப் - கவிதை அரேபியரின் வாழ்க்கைப் பதிவேடு" என்று உமர் (ரழி)  கூறினார்கள்.

நபியவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன், 'நழ்ம்' செய்யுள், 'நஸ்ர்' உரை நடை ஆகிய இரு வகை இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட ஒப்பற்றதொரு நடையில் அருளப்பட்டது. அத்துடன், அது ஜாஹிலிய்யாக் கால இலக்கியப் படைப்புக்களை விட அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்கியது. இன்றும் கூட அரபு இலக்கியப் படைப்புக்களில் தன்னிகரற்ற ஒரே உருவமாக அல் குர்ஆன் விளங்குகின்றது.

# ஜாஹிலிய்யா சமூகத்தில் பெண்களின் நிலை
இக்காலத்துச் சமூகத்தில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டார்கள். சில கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வறுமைக்காகவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காகவும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். இந்த இழி செயலைச் செய்தோருள் ரபீஆ, முழர், தமீம் முதலாம் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்கள்.

பெண் குழந்தை பிறந்தபோது இவர்களது மனோ நிலை இருந்த விதம் பற்றிய அல்-குர்ஆனின் பின்வரும் கூற்று நோக்கத்தக்கது.
"அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள்தாக நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கோபத்தால் கறுத்துவிடும். அவனிடம் கூறப்பட்ட செய்தியை தீய செய்தியாகக் கருதி அச்செய்தியின் கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கின்றன். இழிவோடு அந்தக் குழந்தையை வைத்துக் கொள்வதா அல்லது அதனை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று குழம்புகிறான்." (16: 58 - 59)

"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே வாழ்க்கை வசதிகளை (யும் உணவையும்) அளிக்கின்றோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்." (17:31) என்று கூறி அல்லாஹ் இத்தீய செயலை விளக்கினான்.

கொடிய பாவம் எது என்று நபியவர்களிடம் வினவப்பட்ட போது முதலாவதாக, அல்லாஹ்வுக்கு இணைவைத்தலையும், இரண்டாவதாக, தனது குழந்தையைக் கொலை செய்துவிடுவதையும் குறிப்பிட்டதாக ஒரு ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் ஆகிய நூல்களில் பதியப்பட்டுள்ளது.

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழியும் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்ததையும் காட்டுகின்றன. ஜாஹிலிய்யா சமூகத்தில் பெண்கள் தொடர்பாக மேலும் பல முறைகேடான பழக்கங்கள் இருந்தன. அவற்றுள் சில:
  1. கணவனை இழந்த கைம்பெண்ணை மற்றைய தாரத்து மூத்த மகன் திருமணம் செய்தல்.
  2. விதவையை தனது உறவினரிடம் செல்ல விடாது இறந்த கணவரின் உறவினர் பலாத்காரமாகத் தடுத்து வைத்தல்.
  3. உடன் பிறந்த இரு சகோதரிகளை ஓர் ஆண் சம காலத்தில் மனைவியாக வைத்திருத்தல்.
  4. பெண்கள் அந்நிய ஆடவர் மத்தியில் தமது உடல் அழகை வெளிக்காட்டிக் கொண்டு பகட்டாகப் பழகுதல்.
  5. 'ழிஹார்' என்ற முறை மூலம் மனைவியைத் தனது தாய்க்கு ஒப்பாக்கி, விவாகரத்தும் செய்யாது தாரமாகவும் கொள்ளாது கணவன் தன் மனைவியைத் தடுத்து வைத்தல்.
  6. பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கொடுக்காதிருத்தல்.
இவ்வாறாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் களைந்து, அவர்களுக்குத் தகுதியான சகல உரிமைகளையும் கொடுத்து, அவர்களை சமூகத்தில் உன்னதமான ஓர் இடத்துக்கு அல்குர்ஆன் உயர்த்தியுள்ளது.

# ஜாஹிலிய்யாக் கால சமூகத்தில் காணப்பட்ட திருமண முறைகள்
  1. பெண்ணைப் பராமரிப்பவரிடமிருந்து (வலி) திருமணம் பேசி மஹர் கொடுத்து மணந்து கொள்ளும் முறை. இம்முறை "நிகாஹ் அஸ்ஸஹீஹ்" எனப்பட்டது.
  2. "நிகாஹ் அல்-இஸ்திப்ழாஃ" : கணவன் தனது மனைவிக்கு அவள் விரும்பும்கல்வி, வீரம் போன்ற சிறப்பியல்புகளைக் கொண்ட ஒருவருடன் உடல்ரீதியான உறவு கொண்டு கருவுற அனுமதியளித்தல். இதன் மூலம் பிறக்கும் குழந்தை குறித்த சிறப்பியல்பை அடைய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டது.
  3. "நிகாஹ் அத் தவாதிஃ": ஒரு பெண் தான் விரும்பிய ஏறத்தாழ 10 ஆண்களோடு உடலுறவு கொண்டு  அதன் மூலம் குழந்தை பிறந்த பின்னர் அவள், அவர்களுள் தான் விரும்பும் ஒருவரைச் சுட்டிக்காட்டிப் பிறந்த குழந்தையின் தந்தை அவரே எனப் பிரகடனப்படுத்தல்.
  4. பெண் தனது வீட்டு வாசலில் சிவப்பு நிறக் கொடியொன்றப் பறக்க விடுதல். இந்தக் கொடி விபசார விடுதியைக் குறிக்கும் அறிகுறியாகும். எனவே அப்பெண்ணிடம் செல்லுக் எந்த ஆணையும் அவள் தடுப்பதில்லை.

இவற்றிற்கு அப்பால் அல்-முதஆ, அல்-பஃகாயா, அஷ்-ஷிஃகார் போன்ற திருமண முறைகளும் அங்கு காணப்பட்டன. இவற்றுள் முதல் வகைத் திருமண முறையை மட்டுமே இஸ்லாம் அனுமதித்தது. நபியவர்களும் அவர்களது மூதாதையர்களும் முதல் வகைத் திருமணத்தின் மூலமே பிறந்தனர். தூய்மையான ஆண்-பெண் உறவின் மூலம் பிறக்கும் பேற்றை இறைவன் நபியவர்களுக்கு அருளியிருந்தான்.

# ஜாஹிலிய்யாக் கால சமய நிலை
அன்றைய அரேபியாவில் இருந்த சமய அடிப்படையிலான குழுக்கள்
1. 'முஷ்ரிக்'குகள்
2.'ஸாBIஈன்'கள்
3. 'மஜூஸி'கள்
4. 'யஹூதி'கள்
5. 'நஸாரா'க்கள்
6.'ஹனீFகள்

1. 'முஷ்ரிக்'குகள்:
இவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போராவர். இவர்களே அரேபியாவில் பெரும்பான்மையாக வசித்தவர்கள். குறைஷிகளுள் பெரும்பாலானோர் விக்கிரக வணங்கிகளாகவே இருந்தனர்.  நபியவர்கள் பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பிருந்தே விக்கிரக வணக்கம் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு முன்னர் அரேபியர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (மில்லத்) ஏற்று நடப்போராகவே இருந்தனர். பின்னர் "குஸா ஆ" கோத்திரத் தலைவனாக இருந்த அம்ர் இப்னு லுஹை என்பவன் ஸிரியாவுக்குச் சென்று, அங்கு பின்பற்றப்பட்டு வந்த விக்கிரக வணக்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் "ஹுபல்" எனப்பட்ட விக்கிரகத்தை எடுத்து வந்து விக்கிரக வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான்.

ஒரு நளைக்கு ஒரு கடவுள் என்ற வகையில் கஃபாவில் மாத்திரம் 360 சிலைகள் வைபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தினதும் தலைமைச் சிலையாக ஹுபல் வைக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த செந்-நிறக் கல்லில் செதுக்கப்பட்டிருந்த இந்த ஹுபலின் இரு மருங்கிலும் பொன்னால் செதுக்கப்பட்ட இரு மான் குட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சூழவே இதர 360 சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அரேபியரின் விக்கிரக வழிபாட்டு முறைகள் சில:
1. விக்கிரகங்களுக்கு முன்னால் தலையை நிலத்தில் வைத்து வணங்குதல்
2. அவற்றுக்கு அண்மையிலமர்ந்து அவற்றிடம் தஞ்சமடைதல்
3. அவற்றைச் சுற்றி வலம் வருதல்
4. அவற்றுக்குப் படையல்களைச் சமர்ப்பித்தல்
5. கால் நடை, விவசாய விளைச்சல் முதலானவற்றில் நேர்ச்சை  செய்தல்

அரேபியரின் பிரதான விக்கிரகங்கள் பற்றியும், நபி நூஹ் (அலை) அவர்களது காலத்து விக்கிரகங்கள் பற்றியும் அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

  1. நீங்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களான "லாத்", "உஸ்ஸா" போன்றவற்றையும் மூன்றாவதான "மனாத்"தையும் பார்த்தீர்களா?(53: 19 - 20)
  2. மேலும் அவர்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்; இன்னும் "வத்து" (ஆண் உரு), "ஸுவாஃ" (பெண் உரு), "யகூஸ்" (சிங்க உரு, "யஊக்" (குதிரை உரு, "நஸ்ர்" (கழுகு உரு) முதலானவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள் எனவும் கூறுகின்றனர். (71: 22)

"அல்-ஜிப்த்", "அத்-தகூத்" எனும் பெயெரிலான இரு கடவுளர்களை குரைசியர் வணங்கி வந்தனர்.

நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்து விக்கிரகங்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகழ்ந்தெடுத்து வழிபாட்டுக்காக நிறுத்தியவனும் அவனேயாவான். சிலை வணக்கத்தில் ஈடுபட்டாலும் கூட திரிபடைந்த நிலையில் ஹஜ் வணக்கமும் அரேபியரிடம் இருந்தது. ஹஜ், உம்றாச் செய்தல், கஃபாவைத் தவாப் செய்தல், அரபா, முஸ்தலிபாவில் தங்குதல், குர்பான் கொடுத்தல், கஃபாவை கண்ணியப்படுத்தல் போன்ற வழிபாடுகளும் அவர்களிடம் காணப்பட்டன.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களால் தவ்ஹீதின் நிலைக்களமாக அமைக்கப்பட்ட கஃபா, 'ஷிர்க்'கின் மையமாக விளங்கிற்று. அதனுள் சிலைகள் நிரம்பிக் காணப்பட்டன. அவை நாட்தோறும் பூஜிக்கப்பட்டன. மக்கள் நிர்வாணமாக அதைச் சுற்றி வளம் வந்தனர். அவ்வேளை கைகொட்டி, சீட்டியடித்து, கொம்பூதி ஆரவாரிக்கப்பட்டது. 'குர்பானி'யின் இரத்தம் கஃபாவில் தோய்க்கப்பட்டு அதன் மாமிசம் தரையில் பரப்பப்பட்டது. 'இபாதத்' வழிபாட் சம்பிரதாயபூர்வமாக அமைந்ததே தவிர அர்த்த புஷ்டியுள்ளதாகவும் உள்ளார்ந்ததாகவும் அமையப்பெறவில்லை.

இவ்வாறு இவர்கள் சிலை வணக்கத்தில் ஈடுபட்ட போதும் அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் தொடர்பான விடயத்திலும் தெளிவான நம்பிக்கை இருந்தது. இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு நிறுவுகிறது.

"வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று அவர்களிடம் கேட்டால், "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாகப் பதில் கூறுவார்கள்" (31: 25).

எனினும் அச்சிலைகள் தமக்காக அல்லாஹ்விடம் ச்பார்சு செய்யுமென அவர்கள் நம்பினர். இது பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அல்லாஹ் அல்லாத, தமக்கு எந்தவொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள் இவை எங்களுக்காக அல்லஹ்விடம் மன்றாட்டம் செய்பவை என்றும் கூறுகின்றனர்." (10: 18)

2. ஸாபிஈன்கள் (நட்சத்திர வணங்கிகள்)
இவர்கள் ஏக இறைவனில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ரிஸாலத் பற்றிய நம்பிக்கையும் இவர்களுக்கிருந்தது. ஆயினும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை. ஸாபிஈன்கள் அரேபியாவில் சிறுபான்மையினராவர். அல் குர்ஆன் யஹூதி, நஸாறாக்கள் பற்றிக் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் ஓரிரு இடங்களில் ஸாபிஈன்களையும் சேர்த்துக் கூறியிருப்பதைக் காணலாம்.
(பார்க்க - 2 : 62, 22 : 17, 5 : 69)

3. மஜூஸிகள் (Zoroatrianism)
இவர்கள் நெருப்பு வணங்கிகள். அரேபியாவில் இவர்கள் மிகச் சிலரே வசித்து வந்தனர். அண்டை நாடான பாரசீகத்தில் மஜூஸிகள் நன்கு எழுச்சி பெற்று வாழ்ந்தனர். அரேபியருக்கும் பாரசீகருக்கும் வர்த்தகத் தொடர்பு இருந்தமையால் இவர்களின் மார்க்கம் பற்றிய அறிவு அரபியருக்கிருந்தது.

4. யஹூதிகள் (யூதர்கள்)
திரிபடைந்த தவ்றாத்தைப் பின்பற்றிய இவர்கள் மதீனாவின் அயலில் வாழந்த வந்தேறு குடிகளாவர். இஸ்ராயில் என்பவரின் சந்ததியினரான இவர்கள் எகிப்தில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். எகிப்தின் பூர்வீகக் குடிகளான கிப்தியரின் குறிப்பாக பிரௌனின் எல்லை மீறிய கொடுமைகளுக்கு உள்ளானபோது நபி மூஸா மூலம் யூதர்கள் காப்பாற்றப்பட்டனர். மூஸாவின் மரணத்தின் பின்னர் அவர்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறி வாழ்ந்தனர். பலஸ்தீனில் யஹூதிய்யா எனும் பெயரில் இவர்கள் நிறுவிய அரசை அலக்ஸாண்டரும்(கி.மு.333), ரோமரும்(கி.பி. 44) அவ்வப்போது பலவீனப்படுத்தி அழித்ததனால் யூதர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி வாழ்ந்தனர். அரபுத் தீவகற்பத்திலும் பல பகுதிகளில் தமது குடியிருப்புக்களை அமைத்தனர். யஸ்ரிபில் பனூ கைனுகா, பனூ குறைழா, பனூ நாழிர் முதலாம் பெயர்களில் குடியேறி வாழ்ந்து வந்த கோத்திரத்தவர்களும் யூதர்களாவர்.   பொருளாதார வளமிக்க இவர்கள் அரேபிய சமூகத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தினர். இவர்கள் வட்டித் தொழில் மூலம் பொருளீட்டினர். நபியொருவர் அனுப்பப்படுவதை அறிந்திருந்த யூதர்கள் தமது சமூகத்துள்ளே அந்நபி அனுப்பப்படுவார் என நம்பி எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாற்றமாக குறைஷியருக்குள் நபி அனுப்பப்படவே அந்நபி மீது பொறாமை கொண்டு பல சமயங்களில் அவர்களைக் கொலை செய்யவும் அவர்கள் துணிந்தனர். 

5. நஸாராக்கள் (கிறிஸ்தவர்கள்)
திரிபடைந்த இஞ்ஜீலைப் பின்பற்றிய இவர்கள் மதீனாவின் சூழலில் கணிசமான அளவில் வாழ்ந்தனர். ரோமச் சக்கரவர்த்தி கொன்ஸ்தாந்தீன் (கி.பி. 326) மூலம் ஸிரியாவிலும் பலஸ்தீனிலும் இம்மதம் அறிமுகம் பெற்றது. பின்னர் படிப்படியாக நஜ்த், யஸ்ரிப்,நஜ்ரான் போன்ற பிரதேசங்களிலும் வியாபகமாகியது. திரித்துவக் கொள்கையை விசுவாசித்த அரபுக் கிறிஸ்தவர்கள் தமது சமயப் பிரசாரத்தை அரபுச் சந்தைகளில் மேற்கொண்டதாலேயே அரேபியர் மறுமை, விசாரணை, சுவர்க்கம், நரகம் முதலாம் அம்சங்கள் பற்றியறிந்து கொண்டனர். இஸ் இப்னு ஸாய்தா, உமையா பின் அபுஸ்ஸல்த் போன்றோர் அரேபியாவில் வாழ்ந்த கிறிஸ்தவக் கவிஞர்களாவர். கி.பி. 525 களில் யமன் நாட்டை ஆட்சி செய்த அப்ரஹாவும் ஒரு கிறிஸ்தவனே. 

6. ஹனீப்கள் / ஹனீபிய்யூன்
விக்கிரக வணக்கத்தையும் அன்றைய சமூகத்தில் நிலவிய படு பாதகச் செயல்கள் பலவற்றையும் விட்டொதுங்கி வாழ்ந்து வந்தவர்களே இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.விக்கிரக வணக்கத்தையும் அன்றைய சமூகத்தில் நிலவிய படுபாதகச் செயல்கள் பலவற்றையும் விட்டு ஒதுங்கி வாழ்ந்தோரே ஹனீப்களாவர். நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் ஒன்று இருப்பதாக இவர்கள் அறிந்திருந்தார்களாயினும் அது பற்றிய பூரண விளக்கம் இவர்களுக்கிருக்கவில்லை. அரபு நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சில ஹனீப்களே வசித்தனர். அவர்களுள் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1. சிறந்த பேச்சாளரான குஸை இப்னு ஸாஇதா அல் இயாதி
2. ஸைதிப்னு அம்ரிப்னு நுபைல்
3. அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்
4. உஸ்மான் பின் ஹுவைரிஸ்
5. உமையா பின் அபூ ஸல்லத்

# அரேபியரின் பண்புகள்
* சமய நம்பிக்கையுடன் தொடர்புடைய சில மூடப் பழக்கங்கள்
1. அம்பு வீசிக் குறி பார்த்தல்
2. சாஸ்திரம், சோதிடம் பார்த்தல்
3. ஃபஃல், மை வெளிச்சம் பார்த்தல்
4. நட்சத்திரக் குறி பார்த்தல் (நவ்'உ) -நட்சத்திரக் குறி பார்ப்பவன்  முனஜ்ஜிம் எனப்பட்டான்.
5. பறவைச் சகுனம் (தியரா)
6. நாட் பலன் பார்த்தல்
7. இறந்தோரின் ஆவி சாந்தியடைய வேண்டும் என்பதற்காகப் பலியிடல்

* தீய பழக்க வழக்கங்கள்
1. வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடுதல்
2. பழி வாங்குதல்
3. மதுவருந்துதல்
4. சூதாடுதல்
5. பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல்
6. வரை கடந்த விபசாரம்
7. கோத்திரச் சண்டை

*  நற்பண்புகள்
1. தர்ம சிந்தை
2. வாக்கு மீறாமை
3. தன்மானம் காத்தல்
4. இலட்சிய வேட்கை
5. வறுமையில் பொறுமை
6. தலைமைத்துவத்துக்கு அடிபணிதல்
7. அமானிதம் பேணல்
8. விருந்தோம்பல்
9. போரில் புற முதுகு காட்டாமை
10. தளரா மன உறுதி
11. இறக்க சிந்தை
12. எளியோரை ஆதரித்தல்
13. நேர்மை
14. சுதந்திர வேட்கை

# ஜாஹிலிய்யாக் கால அரேபியாவின் பொருளாதார நிலை
அயல் நாடுகளோடு ஒப்பிடுகையில் அக்காலத்தில் அரேபியா பொருளாதாரத்தில் நலிவடைந்து காணப்பட்டது. உள் நாட்டினுள்ளே வட பகுதி வர்த்தகத்திலும் தென் பகுதி விவசாயத்திலும் விருத்தி கண்டிருந்தது. அன்றைய காலத்து அரேபியர் பின்வரு மூன்று வழிகளில் பொருளீட்டினர்.

1. வணிகம்:
இது அரேபியரின் குறிப்பாக மக்கத்துக் குறைஷியரின் பிரதான தொழிலாக அமைந்திருந்தது. மக்கா நகர் வர்த்தகத்தின் கேந்திரமாக விளங்கியது. வெளி நாட்டு வர்த்தகர்களுக்கு களவு, கொள்ளையிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காகக் கட்டணம் அறவிடும் முறையொன்றும் அங்கு இருந்து வந்தது. இவ்வாறு கட்டணம் அறவிடுவதால் ஒரு சாரார் பெருந்தொகைப் பணம் சம்பாதித்தனர். அரேபியாவில் கொடூரமான வட்டி முறையொன்றும் நிலவியது. அங்கிருந்த யூதர்கள் இத்தொழிலைச் செய்து வந்தனர்.

2. வேளாண்மை
விலங்கு வேளாண்மை, பயிர்ச்செய்கை ஆகிய இரு வகை வேளாண்மையும் அரேபியாவில் இருந்தன. விலங்கு வேளாண்மையில் ஒட்டகை வளர்ப்பு ஆடு வளர்ப்பு இரண்டும் பிரதானமானவை.பயிர்ச்செய்கையில் பேரீச்சை உற்பத்தி முக்கிய இடம் வகிக்க உப உணவுச் செய்கையும் நடைபெற்றது.

அரேபியரின் பொருளாதாரத்தில் பேரீச்சையும் ஒட்டகையும் இரு கண்கள். பேரீச்சை அவர்களின் பொருளாதாரத்தில் பாதியைப் பூர்த்தி செய்ய, ஒட்டகை மீதியைப் பூர்த்தி செய்தது. பேரீச்சை 'பதவி'களின் பிரதான உணவாகும். அவன் மகரந்தச் சேர்க்கை மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் அளவு அவர்கள் பேரீச்சைச் செய்கையில் முன்னேற்றமடைந்திருந்தனர்.

அ) விலங்கு வேளாண்மை
ஒட்டகை அவர்களது பொருளாதாரத்தில் வகித்த பங்கை அதற்கு அவர்கள் சூட்டியிருந்தஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்டு மதிப்பிட முடியும். "ஒட்டகை வாழுமிடங்களில்தான் அறேபியர்க்கு வாழ்வுண்டு" என்ற அரபுப் பழமொழி ஒட்டகையின் பொருளாதாரப் பயன்பாட்டை எமக்கு எடுத்துக்காட்ட வல்லது. ஒட்டகை பற்றிப் பேராசிரியர் Phlip K Hitti தனது History of the Arabs என்ற நூலில் பின்வ்ருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

"ஒட்டகை பதவிகளின் உணவு; பயணத்தின் போது வாகனம்; சுமை தாங்கி; தனிவழியே நண்பன்; சீதனச் சொத்து; பாலைவனக் கப்பல்; ஷெய்கின் செல்வம்; நண்பர்க்கு விருந்து; அதன் தோல் அவர்களின் உடை; தோல், உரோமம், சாணம் இவை  கூடாரத்தின் கூரை; சாணம் அடுப்பின் விறகு; சிறு நீர் தலைக்கு எண்ணெய், நோய்க்கு மருந்து.

அரேபியரின் பொருளாதாரச் சுழற்சியில் குதிரைக்கும் ஓர் இடம் இருந்தது. குதிரை கொள்ளையடிப்பதற்கு உபயோகிக்கப்பட்டது. கொள்ளையடிப்பதன் மூலம் ஒரு சாரார் பொருளீட்டி வந்தனர். அரேபியாவின் நஜ்த் பிரதேசம் குதிரை வளர்ப்புக்குப் பிரசித்தமானது. பணம் படைத்தோரின் சொத்தாகவே இது கருதப்பட்டது. வேட்டையாடவும் துரிதமாகச் செல்லவும் இது பயன்படுத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளிலும் போர்க்களங்களிலும் கூட குதிரை பெரும் பங்காற்றியது.

ஆ) பயிர்ச்செய்கை
மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களில் ஒரு பகுதி தாயிப் நகரிலிருந்து பெறப்பட்டன.மரக்கறி, திராட்சை, ஆப்பிள், மாதுளை, தோடை, வாழை, ஆப்ரிகொட் முதலானவையும் இங்கு விளைந்தன. ஹிஜாஸில் பேரூந்து செழித்து வளர்ந்தது. யெமனிலும் ஏனைய சில பாலைவனப் பகுதிகளிலும் கோதுமை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. 

3. கைத் தொழில்
கைத் தொழில் வகைகளுள் சலவைக் கல் வெட்டுதல், தோல் பதனிடுதல் என்பன குறிப்பிடத் தக்கவை.  இவை தவிர வேற் சில கைத் தொழில்களும் அங்கு காணப்பட்டன. இவை தவிர வேறு சிறு கைத் தொழில்களும் அங்கு காணப்பட்டன.  கைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் விருத்தி அடைந்திருந்த நகரங்களிலேயே நிரந்தரமாகக் குடியேறி வழ்ந்து வந்தனர்.

அரேபியாவில் மிகக் குறைந்தளவு மூல வளங்களே கிடைக்கப் பெற்ற போதும் இருந்த சொற்ப வளங்களையேனும் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அங்கு மத்திய அரசோ அல்லது பாரிய அளவிலான முயற்சியாளனோ இருக்கவில்லை. உண்மையில் இதுவே அரேபியாவில் பொருளாதார விருத்தி ஏற்படாமைக்கான பிரதான காரணியாக அமைந்தது.

# ஜாஹிலிய்யாக் கால அரசியல் நிலை
அக்காலப் பிரிவில் அரேபியாவுக்கு வெளியே இரு பெரும் பேரரசுகள் அல்லது சாம்ராஜ்யங்கள் காணப்பட்டன.
1. பாரசீகப் பேரரசு -  Persian Empire     (கிழக்கு)
2. ரோமப் பேரரசு   -  Romanian Empire (மேற்கு)

இவ்விரு பேரரசர்களுக்கு மத்தியில் அரேபியா அமைந்த போதும் அவற்றின் முடியரசு நிர்வாக முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இன, கோத்திர உணர்வு வலுப்பட்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.நபியவர்கள் பிறந்து வளர்ந்த ஹிஜாஸின் அரசியல் நிலை இதுவாயினும் கிழக்கே ஹீராவிலும் மேற்கே கஸ்ஸானிலும் முறையே பாரசீக, உரோம அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர். அரேபியாவில் மத்திய அரசு அமையாவிட்டாலும் ஒரு வகை நிர்வாக முறை அங்கிருந்ததை அறிய முடிகின்றது. சமூக மக்களுக்கிடையில் அவர்கள் சில பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
Eg: 
  1. பனூ ஜும்ஹ் குடும்பம் - குறிபார்க்கும் வேலை
  2. பனூ ஸஹ்ம் குடும்பம் - விக்கிரகங்களுக்காகப் பலியிடுபவற்றைப் பொறுப்பேற்றல், வழக்குகளைத் தீர்த்தல்.
  3. பனூ தமீம் குடும்பம்      - தண்டம் அறவிடல்
  4. பனூ அதீ குடும்பம்        - தூது செல்லல்

இவை தவிர அப்போது அங்கு வழக்கில் இருந்து வந்த பின்வரும் சொற்பிரயோகங்களும் அங்கு ஒரு நிர்வாக முறை இருந்ததை உணர்த்துகின்றன.
  1. 'தாறுன்-நத்வா'    ஆலோசனை மன்றம்,  இது பாராளுமன்றம் போன்றதொரு அமைப்பாகும்.2. 'லிவாஃ'                 கொடி, யுத்தத்தில் தலைமை தாங்குவதை இது குறிக்கும்.
  2. 'ஹிஜாபா'             கஃபாவிற்கு ஆடை போர்த்துதல்.
  3. 'ஸிகாயா'              ஹாஜிகளுக்குக் குடினீர் வழங்குதல்.
  4. 'ரிஃபாதா'               ஹாஜிகளுக்கு உணவு விநியோகித்தல்.

இவை அனைத்தும் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் அரேபியாவில் முறை சாரா அரசியல் நிர்வாக அமைப்பொன்று இருந்துவந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது'

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது. அடுத்த ஆண்டு(2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. அந்த தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் சுமார் 53000 வாக்குகளை பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்திற்கு தேவையாகும். அதனால் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போடாது.

இன்று இந்த நாட்டில் இன வாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாதத்தை நோக்கி செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தோதலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்;வு பற்றி பேசவேண்டும். அதன் மூலம் தீர்வொன்றை எட்ட முடியும்.

முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு எந்த தீர்வையம் பெற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது.

எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை முற்றாக தடுப்பதற்காக மாற்று தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் இரண்டு கிராமங்களை தெரிவு செய்து இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்குள் அந்த பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் பணி; பெண்ணாக வெளி நாட்டுக்கு செல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்குவதே எனது இலக்காகும்.

அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரை தெரிவு செய்துள்ளேன். அதேபோன்று இன்னுமொரு தமிழ் கிரமம் ஒன்றையும் தெரிவு செய்து அந்த பிரதேசங்களில் வறுமையான நிலையிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செய்து அவர்களுக்கு மாதமொன்றுக்கு பத்தாயிரம் ரூபா வருமானத்தை ஏற்படுத்த வழி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்' என்றார்.

கிண்ணியாவில் அரச ஊழியர்கள்.

Government Servents of Kinniya copy
ஒரு பிரதேசத்தின் கல்வி மட்டத்தை எடுத்துக் காட்டும் பிரதான அளவுகோளாக அப்பிரதேசத்தின் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கருதப்படுகின்றது. ஒரு ஊரில் அரச உத்தியோகத்தர்கள் அதிகமாக இருக்கின்ற போது அது படித்தவர்கள் உள்ள ஊர் என்றும், குறைவாக உள்ள போது கிராமச்சாயல் கலந்த பின்தங்கிய ஊராகவும் கருதப்படுகின்றது.
கிண்ணியாவின் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தற்போது 2440 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள 'அரச உத்தியோகத்தர்கள் - 2012' என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்வித்துறை சார்ந்தோர் 1007 பேர் கிண்ணியாவில் வசிக்கின்றனர். இதில் கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்போர் உள்ளடக்கப் பட்டுள்ளனர்.

கல்வித்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் தவிர்ந்த ஏனைய அரச துறை சார்ந்தோர் 1128 பேர் கிண்ணியாவில் வசிக்கின்றனர். இதில் உயர் பதவி வகிப்போர் முதல் அலுவலகப் பணியாளர் வரையானோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவைச் சேர்ந்த 305 பேர் பாதுகாப்புப் படைகளில் பணி புரிகின்றனர். இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ACM-Mussil1கிண்ணியாவில் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அதிக அரச உத்தியோகத்தர்களும், சிலவற்றில் குறைவானோரும் வசிக்கின்றனர். உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் எந்த ஒரு அரச உத்தியோகத்தரும். இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் துறைசார்ந்தோர் குட்டிக்கராச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே அதிகம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள கல்வித் துறைசார்ந்தோரின் எண்ணிக்கை 91 ஆகும். இரண்டாவது எண்ணிக்கையான 83 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். மூன்றாவது எண்ணிக்கையான 82 பேர் மாலிந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 4வது எண்ணிக்கையான 78 பேர் சின்னக்கிண்ணியா பிரிவிலும் 5வது எண்ணிக்கையான 77 பேர் மாஞ்சோலைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர்.
உப்பாறு, நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கல்வித்துறைசார்ந்த அரச உத்தியோகத்தர் எவருமில்லை.. சூரங்கல், மஜீத்நகர், மணியசங்குளம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா 1 ஆசிரியர்கள் வசிக்கின்றனர்.
கல்வித்துறை, படைகள் தவிர்ந்த எனைய அரச உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையான 102 பேர் மாஞ்சோலைச் சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையான 94 பேர் பெரிய கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் அதேவேளை, 3 வது அதிக எண்ணிக்கையான 93 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 4 வது அதிக எண்ணிக்கையான 84 பேர் மாலிந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 5வது அதிக எண்ணிக்கையான 76 பேர் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர்.
உப்பாறு, மஜீத்நகர், மணியரசங்குளம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் எவருமில்லை. சூரங்கல், நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா 4 ஏனைய அரச உத்தியோகத்தர்கள் வசிக்கின்றனர்.
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை ஆகிய படைத்தரப்பைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையான 55 பேர் ஆயிலியடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். இவர்களுள் அதிகமானோர் சிவில் பாதுகாப்புப் படையில் உள்ளனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையான 26 பேர் இடிமண் கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், மூன்றாவது அதிக எண்ணிக்கையான 24 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர். 4வது அதிக எண்ணிக்கையான 20 பேர் காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் அதேவேளை 5வது அதிக எண்ணிக்கையான 18 பேர் மாஞ்சோலைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர்.
உப்பாறு, ஈச்சந்தீவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எவரும் படைகளில் கடமை புரியவில்லை. ஆலங்கேணி, மஹ்ரூப்நகர், கட்டையாறு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா இருவர் படைத்தரப்பில் பணி புரிகின்றனர்.
படைத்தரப்பைப் பொறுத்தவரை மொத்தமாக 166 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் பணி புரிகின்றனர். 103 பேர் பொலிஸில் கடமை புரிகின்றனர். இலங்கை இhணுவத்தில் 29 பேரும், கடற்படையில் 5 பேரும், விமானப் படையில் இருவரும் பணி புரிகின்றனர்.
இலங்கையில் உயர் பதவிகளாகக் கருதப்படும் அகில இலங்கைச் சேவைகளிலும் கிண்ணியாவைச் சேர்ந்தோர் இருக்கின்றனர். அந்த வகையில் இலங்கைத் திட்டமிடல் சேவையில் மூவரும், இலங்கை கல்வி நிருவாக சேவையில் மூவரும், இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இருவரும் பணிபுரிகின்றனர். இலங்கை நிருவாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை விவசாயச்சேவை, இலங்கை பொறியியல் சேவை ஆகியவற்றில் தலா ஒருவரும் பணி புரிகின்றனர்.
கிண்ணியாவில் கல்வி மட்டம் அதிகரித்து வருவதால் அரச உத்தியோகத்தரகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
********************

Thursday, September 26, 2013

சூரை மீன் ஒவ்வாமையால் கிண்ணியாவிலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சூரைமீன் ஒவ்வாமை காரணாமாக சுகயீனமுற்ற இருவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கிண்ணியா, முதூர் பகுதிகளில் மலிவு விலையில் அதிகளவு விற்பனையாகும் சூரைமீன்களை உட்கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவன்னமுள்ளது.
இதுவரை முதூர் வைத்தியசாலையில் 42 பேரும், கிண்ணியா தளவைத்தியசாலையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், சூரைமீனின் வழமையான ஒவ்வாமைத்தன்மையே இவர்களின் சுகயீனத்திற்கு காரணமாகவிருக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் இலங்கை மாணவன் சாதனை

குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம் (IPC-Islam Presentation Committee)  அவ்காப்  அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி"  குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்கான பிரிவில் மீயல்லை, மாத்தரையைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் இம்முறையும் தனது பிரிவில் முதலாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்க்கிறார். அவர் தனக்கான பரிசை நீதி அமைச்சின் முதன்மைச் செயலாளரிடம் இருந்து  பெற்றுக்கொண்டார் .

கடந்த வருடப் போட்டியிலும் (அல் ருஹைமானி-2012) மற்றும்  குவைத்தில் நடாத்தப்பட்ட இன்னும் பல குர்ஆன் மனனப் போட்டிகளிலும் இவர்  முதலாம் இடத்தை பெற்ருக்கொன்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் அனைத்து பிரிவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 550  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர.

வாழைச்சேனை மீனவர்களால் பிடிக்கப்பட்ட பாரிய புலிச்சுறா

வாழைச்சேனை பிரதேத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்; பாரிய புலிச்சுறா ரக மீன் ஒன்றை பிடித்து வந்துள்ளனர். 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் இந்த மீன் கொண்டுள்ளது.



வாழைச்சேனை பிரதேத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்; பாரிய புலிச்சுறா ரக மீன் ஒன்றை பிடித்து வந்துள்ளனர். 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் இந்த மீன் கொண்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2281#sthash.yiFCPEXu.dpuf
வாழைச்சேனை பிரதேத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்; பாரிய புலிச்சுறா ரக மீன் ஒன்றை பிடித்து வந்துள்ளனர். 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் இந்த மீன் கொண்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2281#sthash.yiFCPEXu.dpuf