சூரைமீன் ஒவ்வாமை காரணாமாக சுகயீனமுற்ற இருவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியா, முதூர் பகுதிகளில் மலிவு விலையில் அதிகளவு விற்பனையாகும்
சூரைமீன்களை உட்கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின்
எண்ணிக்கை அதிகரித்தவன்னமுள்ளது.
இதுவரை முதூர் வைத்தியசாலையில் 42 பேரும், கிண்ணியா தளவைத்தியசாலையில் 2
பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் வெளிநோயாளர் பிரிவில்
சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், சூரைமீனின் வழமையான ஒவ்வாமைத்தன்மையே
இவர்களின் சுகயீனத்திற்கு காரணமாகவிருக்கலாம் எனவும் வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment