Thursday, October 3, 2013

புல்மோட்டை ரணவிரு கிராமத்திற்கு பா.உறுப்பினர் தௌபீக் மா.ச.உறுப்பினர் அன்வர் விஜயம்


2புல்மோட்டை 14ம் கட்டை பகுதியில் இராணுவப்டையினரால் உருவாக்கப்படும் ரணவிரு கிராமத்திற்கு திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மாகாண சபை உறுப்பினர்அன்வர் மற்றும் பள்ளி நிர்வாகிகள்  நேரடியாக தளத்திற்கு விஜயம் மெற்கொண்டு 2013.10.02ம் திகதி பார்வையிட்டனர்.
சுமார் 60க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை அளவிட்டு டோஸர் மூலம் பிரதேச மக்களின் காணிகள் தள்ளப்பட்ட நிலையில் குறித்த திகதியில் ஏற்கனவே 14ம் கட்டைப்பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமாக காணிகளை பூஜா பூமி மற்றும் தொல் பொருள் என்ற போர்வையில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அளவை செய்ய நில அளவையாளர்கள் மேற்கொள்ள முற்பட்டபோது பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் மேற்கொண்டதை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த அளவையின்போது தமது கடமைக்கு குந்தகம் விளைவித்ததாக நில அளவையாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் மா.ச.உறுப்பினர் அன்வர் உட்பட ஐவர் நீதி மன்றத்திற்கு ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ரூபா 10000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் பொலிஸாரினால் குறித்த பிரதேசத்தில் தொடரந்து நில அளவையை மேற்கொள்ள நீதிமன்ற கட்டளை கேட்கப்பட்டபேர்து போதிய ஆதாரங்கள் சமர்பிக்குமாறு நீதிமன்றத்தால் வேண்டப்பட்டதை அடுத்து இரண்டு தவணை கடந்த நிலையில் 2013.10.02ம் திகதி குச்சவெளி நீதிவான் நீதி மன்றத்திற்கு மாவட்டச்செயலாளர் பிரதேச செயலாளர் இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை அடுத்து குச்சவெளி பிரதேச செயலாளர் சார்பாக உதவி பிரதேச செயலாளரும் மாவட்டச் செயலாளர் சார்பாக கச்சேரியன் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரும் ஆஜராகியிருந்தனர்.
போதிய ஆதாரங்கள் இன்மையால் மீண்டும் இவ்வழக்கு எதிர்வரும் 2013.11.06ம் திகதி வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இக்காணிகள் சம்பந்தமாக கடந் 2013.10.30ம் திகிதி மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் அவசர பிரேரணை ஒன்று சபைக்கு கொண்டு செல்லப்ட்டதை அடுத்து விவாதங்களின் பின்னர் சபையில் அமளி துமளி ஏற்பட்டு சபை அமர்வு ஒரு மணிநேரம் ஒத்தி வைக்கப்ட்டதும் மாத்திரமல்ல மா.சபை உறுப்பினர் அன்வர் காணிப்பிரச்சிணை தீர்க்கப்டாவிட்டால் இந்த சபையில் முஸ்லீம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிவரும் எனவும் எச்சரித்ததுடன் எதிர் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் ஒருமித்த குரலில் எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடப்பட்டது.-http://lankamuslim.files.wordpress.com/2013/10/11.jpg

No comments: