தொடர்புடைய விடயங்கள்
தென் கிழக்கு பல்கலைக்க கழகத்தின்
சம்மாந்துறை வளாகத்திலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள
மாணவர்களே இரு குழுக்களாக இந்த மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
மாணவ குழுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்த
பல்கலைக்கழக நிர்வாகம் முயன்ற போதிலும் அது பலனளிக்காத நிலையில்
காவல்துறையினர் அங்கு விரைந்து மோதலை கட்டுப்படுத்தியதாக
தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர் சங்கத் தேர்தல்
மாணவர் சங்கத் தேர்தல்
தாக்குதல்க்குள்ளாகி காயமடைந்து
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களில் 6 பேர் பெண்கள் என
சம்மாந்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் வை.டி. எம். அஸீஸ் கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாணவ சங்க தேர்தலின்
போது 2ம் 3ம் வருட மாணவர்களுக்கிடையில் உருவான முரண்பாடுகளின் எதிரொலியாகவே
இந்த மோதல் இடம் பெற்றுள்ளதாக பல்கலைக் கழகத்தின் துனை வேந்தர்
டாக்டர்.எஸ். எம் முகமட் இஸ்மாயில் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.
மறு அறித்தல் வரை பிரயோக விஞ்ஞான பீடம்
மூடப்பட்டுள்ளதோடு குறிதத பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையவும்
தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment